A POEM BY
THENMOZHI RAJAGOPAL
(MADHURA)
dense quiet of moments beyond
the reach of speech.
Seated facing each other, still,
speaking not, being silent.
In the realm within
as the extension of dialogues infinite
even after going away from thee
memories would keep wandering
all over....
For those our kith and kin complaining
that we are lenient with the other
the oneness of our thoughts
could never be deciphered.
More than holding fast
as if under leash
isn’t it in allowing the wings to flutter
our Love Supreme stays alive for ever?
மொழிதலற்ற கணங்களின்
அடர் மௌனத்தைக்
கலைக்க விரும்பியதேயில்லை.
எதிரெதிரே அமர்ந்திருந்தும்
ஏதும் பேசாமல்...
அகவெளிக்குள்
ஆயிரமாயிரம்
உரையாடல்களின் நீட்சியாய்
உனைப் பிரிந்தபின்னும்
உலவிக் கொண்டிருக்கும்
நினைவுகள்...
அடுத்தவரிடம்
விட்டுக்கொடுத்து விட்டதாய்
அங்கலாய்க்கும்
ஊர்,உறவுகளுக்கு
ஒருபோதும் புரியப்போவதில்லை
நம் கருத்தொற்றுமைகள்..
இழுத்துப் பிடித்து
இறுக்கி வைப்பதைவிட
சிறகடிக்க வைப்பதிலல்லவா
செழித்திருக்கிறது
நம் பெருநேசம்?
மதுரா (தேன்மொழி ராஜகோபால்)
No comments:
Post a Comment