A POEM BY
ANBUTHOZHI JAYASHREE
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
In its stem that bore it firm
there were thorns and leaves
Half-unfolded coyly
It would lure you into caressing it
as if in communion.
For gifting its quietude a bouquet
in rows would bloom
a woodland of rose
in the mobile.
Would gift a sequence of the hours
of the wilderness of flowers
with no intent whatsoever
Would beget roses untiringly.
With sturdy hands spreading
from out of blue
the strength to bear that massive hug
truly its tiny wings wouldn’t be having
_ So saying with a bow
the little sparrow
of the hardened wild tree
would fly away, up above.
மீச்சிறு ரோஜாமலரொன்று வந்து விழுந்தது
உறுதியோடு தாங்கிப் பிடிக்கும் காம்பில்
முட்களும்... இலைகளுமிருந்தன
விரிந்தும் விரியாத அதன் தயக்கத்தை
முயக்கமாக கொஞ்சத் தோன்றும்
அம்மௌனத்திற்கு ஒற்றைப்
பூங்கொத்தைப் பரிசளிக்க
வரிசையாக வந்து விரியும்
அலைபேசியிலோர் ரோஜாக்காடு
மலர்க்காட்டின் தொடர்பொழுதுகளை
நோக்கமின்றிப் பரிசளிக்கும்
சலிக்காது ரோஜாக்களைப் பிரசவிக்கும்
வலிமிகு கைகள் எங்கோயிருந்து பரவ...
அப்பெரும் அணைப்பைத் தாங்கும் வலிமை
நிச்சயம் தன் மீச்சிறு சிறகுகளுக்கு இருக்காதென்றே
இரக்கமில்லா காட்டுமரத்தின் சிட்டுக்குருவி
வணக்கம் சொல்லிப்பறக்கும்
No comments:
Post a Comment