TWO POEMS BY
SHAHIBKIRAN THAKKAI
(1)
That which you can
is something expected by none.
The fountain of spring is stone inscription
_ the language unknown
To read we need an eon.
In the folds of brain
reflections many a million
The tip of a machine not self-reliant
even be a line
the volume of its length is its contraction
With what scale can a dog and a goat
be weighed
Oh, where to fix a strand of feather
and a butterfly
A sun and a star _where to see them together?
Flight is not space infinite
Space: the infinite possibility of the finite
A withered leaf is released from the tree.
A drain in penance for ages attains deliverance.
Shahibkiran Thakkai
நீங்கள் நினைப்பதை யாருக்கும் சொல்லமுடியாது.
அப்படி சொல்ல முடிந்தது
யாரும் எதிர்ப்பார்க்காதது.
சுனையின் நீரூற்று மொழியறியா கல்வெட்டு.
படிக்க ஒரு யுகம் வேண்டும்.
மூளையின் மடிப்புகளில்
கோடி பிம்பங்கள்
தனித்தியங்கா எந்திரத்தின்
முனை ஒரு கோடானாலும்
நீட்டி வரையும் அளவே அதன் குறுக்கம்.
ஒரு நாயையும் ஆட்டையும் எந்த அளவீட்டில் எடைப்பது?
ஓர் இறகையும் பட்டாம்பூச்சியையும் எங்கே பொருத்துவது?
ஒரு சூரியனையும்
நட்சத்திரத்தையும் ஒருங்கே எங்கே பார்ப்பது?
பறத்தல் கட்டற்ற வெளியல்ல.
வெளி, எல்லையின் நெடிய சாத்தியப்பாடு. மரத்திலிருந்து
ஒரு பழுப்பு விடுபடுகிறது,
யுகமாய் தவமிருக்கும்
சாக்கடை முக்தியடைகிறது.
- சாகிப்கிரான்
The child wrote it in
the slate
That it was a mere
circle
It received beating
and ridicule
But the child
preserved it
From the slate
a lizard and a
dinosaur ran out
People closed their
cooking utensils
all too tightly.
Then destroying
forests
They turned
victorious.
Henceforth all over
the nation
We can plant trees of
impalement
None should call this
Profane.
ஆபாசம்
குழந்தை சிலேட்டில்
அதை
எழுதியது.
வெறும்
முட்டையாகப் போட்டுவிட்டதாக
கொட்டு
விழுந்தது.
ஆனால்
குழந்தை
அதைப்
பத்திரப்படுத்தியது.
சிலேட்டிலிருந்து
ஒரு
பல்லியும் பின்னாலேயே
ஒரு
டையனோசரும் ஓடின.
மக்கள்
சமையலறை பாத்திரங்களை
இறுக
மூடினார்கள்.
பிறகு
வனங்களை அழித்து வெற்றியடைந்தனர்.
இனி
நாடெங்கும்
கழு
மரங்களாக நட்டுவிடலாம்.
இதை
ஆபாசம்
என
யாரும்
சொல்லக்கூடாது.
- சாகிப்கிரான்.
No comments:
Post a Comment