A POEM BY
MARIMUTHU KALIDAS
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
Cover your ears tightly,
O gentle men
The cry of that child might tear off
your eardrum.
Close your eyes tightly,
O noblemen
That father’s heart-wrenching anguish
on having to part with his child
would prove unbearably unnerving.
Cover your nose,
O gallant men
The stench of human
sliced and lying amidst the
neatly cut meat slices
might make you swoon
On an early night
After everything was over
That which your wine-cup
holds as intoxication
is but the blood of commoners
_ Let it be told by Time some day
with a slap on your cheek,
What else to say…..
INIYAVAN KALIDAS
Marimuthu Kalidas
உங்கள் காதுகளைப்
பொத்திக் கொள்ளுங்கள் கனவான்களே.,
அந்தக் குழந்தையின்
அழுகுரல் உங்கள் செவிப்பறையை கிழிக்கக்கூடும்...
உங்கள் கண்களை
இறுக மூடிக் கொள்ளுங்கள் கண்ணியவான்களே.,
அந்தத் தகப்பனின்
பிரிதல்நிமித்தம் உங்களை நிலைகுலையச் செய்யக்கூடும்...
உங்கள் நாசிகளை
பொத்திக் கொள்ளுங்கள் நல்லவர்களே.,
உங்கள்வீட்டு சமையலறையின்
நறுக்கப்பட்ட இறைச்சிக்கிடையே வெட்டுண்டு கிடக்கும் மனிதவாடை உங்களை மூர்ச்சையடையச் செய்யக் கூடும்...
எல்லாம் நிகழ்ந்து முடிந்த ஒரு முன்னிரவில்
நிகழும் வெற்றிக் கொண்டாட்டத்தில்
உங்கள் கையில்
பிடித்திருக்கும் மதுக்கோப்பையில்
போதையாகிக் கொண்டிருப்பதென்னவோ.,
சாமானியனின் செங்குருதி என்பதை என்றாவது
ஒருநாள் காலம்
உங்கள் கன்னத்திலறைந்து சொல்லட்டும்.
- *இனியவன் காளிதாஸ்.*
No comments:
Post a Comment