INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Saturday, March 5, 2022

MARIMUTHU SIVAKUMAR

 A POEM BY

MARIMUTHU SIVAKUMAR

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

FATHERING MOUNTAINS
Mountains began to talk
Their voices sounded majestic
The tea-buds all over the mountains
set right all the preparations
for listening to their words
This is their time
The mountains are going to give their maiden speech today.
In the meanwhile
Mothers and Fathers died inside the mounts
come to stand in rows
casting away the tombs
The songs of mountains
Their reports onresearch findings
Their agreements
So, for submitting all and more
to the mountains
I too am in the row.
The mountains began talking
one by one
That in their midst they have
Done away with
discriminations of Colour,
Class
Craving after post
Arrogance
The influence of I
Buried them all deep down
So a mount
said aloud.
I asked a question
Who is the seniormost of you all.
The mountains laughed
Sniffed at me sarcastically
They discussed my query.
It is you who preserve us and help us stay alive
_ you are our fathers
vowed they..
At that moment my father
dead and gone
came running
and hugging me close
kissed me
You are the living father cried he.
Learning the essence of mountains
I gift a flower from there
to my father dear.

மலைகளின் தந்தை
மலைகள் பேச ஆரம்பித்தன
அதன் குரலில் கம்பீரத்தொனி நிரம்பியிருந்தது.
மலைகளில் நிரம்பிக்கிடந்த தேயிலை அரும்புகள் அதன் பேச்சை
செவிமடுப்பதற்கான சகல ஆயத்தங்களையும் சரிசெய்தன.
இப்போது மலைகளின் நேரம்
இன்று தான் தனது கன்னிப்பேச்சை மலைகள் தொடப்போகிறது.
அதற்கிடையில்
மலைகளுக்குள் மடிந்துப்போன
அம்மாக்களும் அப்பாக்களும்
கல்லறைகளை விலக்கிக்கொண்டு அணிவகுத்து நின்றனர்.
மலைகளின் பாடல்கள்
மலைகளின் ஆய்வறிக்கைகள்
மலைகளின் ஒப்பந்தங்கள்
என அத்தனையையும்
மலைகளிடம் சமர்ப்பிப்பதற்காக
வரிசையில் நானும்,
அப்போது ஒவ்வொரு மலைகளும் பேச ஆரம்பித்தன
அவைகளுக்கிடையில்
நிறபேதம்
வளபேதம்
பதவிமோகம்
ஆணவம்
நான் எனும் அதிகாரம் அத்தனையும் மண்ணுள் புதைத்து விட்டதாக ஓர் மலை குரலெழுப்பியது.
அங்கிருந்த நான் உங்களில் மூத்த மலை யாரென கேள்விக்கணை தொடுத்தேன்...
மலைகள் வாய் விட்டு சிரித்தன
மலைகள் என்னை ஏளனமாய் மோர்ந்தன
மலைகள் என் வினா குறித்து பேசின.
எங்களை இவ்வளவு அழகாக வாழவைக்கும் நீங்களே எங்கள் தந்தைகள் என சூளுரைத்தன.
அப்போது இறந்துப்போன என் தந்தை ஓடி வந்து என் கட்டி முத்தமிட்டார்..
என்னை வாழும் தந்தையென சத்தமிட்டார்.
நான் மலைகளின் பக்குவமறிந்து
மலைகளிலிருந்து மலரொன்றை பரிசாக என் தந்தைக்கு பரிசளிக்கிறேன்.
~~~~~

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024