INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Tuesday, March 29, 2022

THAMIZHNATHY

A POEM BY
THAMIZHNATHY
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


FROZEN TIME FRAME
The woman releasing herself from home
removes the wall clock of the home exclusive
where she has arrived
and hides it.
Tears off the calendar pages
holding them in a bunch
After switching off the mobile
She looks in the mirror
The face gleaming in the gay abandon
of forsaking Time.
Henceforth her hours and meals time
are nameless.
No need to feel sad about the dust
settling on the door
that no friend nor foe knocks at.
Just as discarding the all too tight
and absolutely unnecessary inner-wears
She removes all the dos and don’ts carefully taught
and with a swing throws them out.
They rise up above, higher and higher
as a bird having no heart to ever return
to the world at all.

காலம் உறைந்த சட்டகம்

வீட்டிலிருந்து
தன்னை விடுவித்துக்கொண்ட பெண் தான் வந்தடைந்த தனி வீட்டின் சுவர்க்கடிகாரத்தைக் கழற்றி மறைத்துவைக்கிறாள்
நாட்காட்டியின் தாள்களை கொத்தாகக் கிழித்தெறிகிறாள்
அலைபேசியை அணைத்துவைத்தபின் காலத்துறப்பின் களிப்பேறி மினுங்கும் முகத்தை கண்ணாடியில் பார்க்கிறாள்.
இனி அவளது
பொழுதுகளுக்கும்
உணவு வேளைகளுக்கும் பெயர்களில்லை
நண்பர்களாலோ எதிரிகளாலோ தட்டப்படாத கதவில்
படியும் காலத்தின் தூசியைக் குறித்தொரு விசனமுங் கொள்ள வேண்டியதில்லை
இறுக்கமானதும் அவசியமற்றுப் போனதுமான உள்ளாடைகளைக்
கழற்றி எறிந்ததுபோல
கற்பிக்கப்பட்ட ஒழுங்கனைத்தையும்
கழற்றி சுழற்றி வீசுகிறாள்
அவை மேலே மேலே செல்கின்றன
பூமிக்குத் திரும்பவே மனமற்ற ஒரு பறவையைப் போல.

தமிழ்நதி

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024