INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Tuesday, March 29, 2022

IYARKKAI

 A POEM BY

IYARKKAI

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


“PLUCKKkk…”
The dry pond is quiet and still
When a thin current of wind
swirls and gets on the shore
in the manner of making even the
small mounds and fissures,
When the trees spread the shadow
of their barren branches
and express thanksgiving in their own way
With the dung of sheep and rat
and urine spreading stench,
avoiding going around and
the cattle getting down straight
and reaching the bank
looking back at the length breadth
and depth of the waterbed
the pond remains quiet
just as an old woman
occasionally feeling the shrunken lines
of her abdomen
looking at its lines on the shore
and the shadows of the birds flying past
watching the dryness that flows on the shore
and climbs up the mountain
it stays quiet.
That day
at that time
an unknown woman
comes and sits on the pond-steps
searching from her sterile lap
she throws the stones
one by one
One
Two
Three
Till that the pond watching quietly
and the fourth stone lands in it
“Plukk……”

ப்ளக்.
******
- இயற்கை

வறண்ட குளம் அமைதியாக இருக்கிறது
மிகச் சின்னதான ஓரு காற்றுச் சுழல்
வெடிப்புகளைச் சமன் செய்வதைப் போலச்
சுழன்று கரையேறுகிற போதும்
மரங்கள் தமது
வெறுங் கிளைகளின் நிழலைப் போட்டு
தமதளவில் ஓர் நன்றியாற்றுகிற போதும்
முதல் நாளின் புழுக்கைகளும் சிறுநீரும் நெடி கிளப்ப
சுற்றிச் செல்வது தவிர்த்து
நேராக இறங்கிக் கரையேறும் மந்தை
குளத்தின் நீளம் அகலம் ஆழத்தை
திரும்பி பார்த்துச் செல்கிற போதும்
குளம் அமைதியாகவே இருக்கிறது
வயோதகி எப்போதாவது
தனது அடிவயிற்றின் சுருக்கங்களை
தடவிக்கொள்ளுதல் போல
சுற்றிலும்
கரையில் படிந்திருக்கும்
தனது கோடுகளைப் பார்த்துக்கொண்டு
கடக்கும் பறவைகளின் நிழல்களைப் பார்த்துக்கொண்டு
கரையில் வழிந்து மலையேறும்
வறட்சியைப் பார்த்துக்கொண்டு
அமைதியாகவே இருக்கிறது
அன்று
அந்நேரம்
யாரோ அவள்
வந்து
படித்துறையில் உட்காருகிறாள்
திறக்காத மடியில் துழாவி
ஒவ்வொரு கல்லாய் எறிகிறாள்
ஒன்று
இரண்டு
மூன்று வரை
அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தக் குளத்தில்
நான்காம் கல்
ப்ளக்.

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE