INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Saturday, March 5, 2022

YAVANIKA SRIRAM

 A POEM BY

YAVANIKA SRIRAM

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

SWAYING CORN PLANTS
From nearby trees
tiny birds
screech in this noontime.
For he remaining workless and lazy
Sleep on sun’s orbit day after day
Hot water springs are there
Somewhere, they say
Dogs and cattle keep going to and fro
The corn –plants keep swaying
Don’t paint the noontime
all yellow, Van Gogh Dear
Songs of hauling water Toiling peasant
Fish in the local pond
The dream of reaching the horizon
has come to nought.
Till dusk miniscule tales
Along my accidental trail
an acquaintance greets me
enquiring after my welfare
The ploy of inertia in having a dialogue
for the sake of being
in the continuum of the conversation
that those dead had left behind
And then,
the yawn.
What are you doing now
They mutually enquire
Glued teeth on legs and bums
All these happen
to a habitual insomniac.
Yavanika Sriram

அசையும் சோளப்பயிர்கள்
அருகாமை மரங்களில் இருந்து
சிறுபறவைகள்
இந்நண்பகலில் ஒலியிடுகின்றன
ஆயிரம் ஆண்டுகளாய் வேலைகள் ஏதுமற்று சோம்பலில் இருந்தவனுக்கு
சூரியப்பாதையில் அன்றாடம் உறக்கம்
எங்கோ சுடுநீர் ஊற்றுகள் குமிழியிடுவதாய்ச்சொல்வார்கள்
ஊடாடும் நாய்கள் கறவையினங்கள்
அசையும் சோளப்பயிர்கள்
மதியவெயிலை மஞ்சளாய் வரைந்து
தள்ளாதே அன்பே வான்கா
நீரேற்றப்பாடல்கள் கடின உழவன்
ஊர்க்குளத்தில் மீன்கள்
தொடுவானம் வரை போகும் ஆசையில்
மண்விழுந்து விட்டது
அந்திவரை சின்னஞ்சிறுகதைகள்
நிகழும் வழித்தடத்தில் ஏற்கனவே அறிமுகமானவர்
நலம் விசாரிக்கிறார்
மரணித்தவர்கள் விட்டுப்போன
உரையாடலின் தொடர்ச்சியில்
இருப்பதற்கெனப்பேசிக்கொள்ளும்
அலுப்பின் தந்திரம்
கொட்டாவி வருகிறது
அப்புறம் என்னசெய்கிறாய்
ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்கிறார்கள்
கால்களிலிலும் புட்டத்திலும் ஒட்டுப்புற்கள்
உறக்கத்தில் நடப்பவனுக்குத்தான்
இவ்வளவும் நேர்கிறது

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE