A POEM BY
VELANAIYOOR THAS
And the ease of fish floating with finesse
Gentle words become the River of Mercy
Gentle words come to us as God’s Prophesy
Gentle words lift up the tired one
and make him stand erect
They applaud him shake hands with him
wipe off his tears remaining by his side
caresses his head consolingly.
Gentle words are weightless
Have you felt them flying off you and those listening to them holding them so lovingly
Gentle words do not apply on themselves
things needless
as deceit anger envy and the rest
hence they don’t turn hot and burn
soaked in the snowy water called Love
they shroud the heart so soft and cool
Word born of love
turns into benign poems
it turns he who utters it into God
for those suffering and ailing and despairing
words of love become the water resurrecting.
Relieving them of sorrow
Those words nourish them to flourish
Words of Love
are gentle
and of low tone
yet they brim with brilliant demeanor
Mmm what more do we want?
Why delay
Llet’s speak words benign straightaway
From dawn till night, I say!
Shall we begin?
Good Morning I am happy to see you
Or
If the person you meet happens to be so close to your heart
You can start thus _
In the poem brimming and overflowing in your eyes
I too have become a word _ “
how nice!’
இனியன பேசுதல்
.................... வேலணையூர்_தாஸ்.
அன்பின் சொற்களுக்கு பறவையின் இறகு.
இலகுவாய் மிதக்கும் மீனின் லாவகம்.
இனிய சொற்கள் கருணையின் நதியாகிறது.
இனிய சொற்கள் கடவுளின் வார்த்தையாய் வருகிறது.
இனிய சொற்கள்
சோர்ந்தவனை தூக்கி நிறுத்துகிறது
பாராட்டுகிறது கைகுலுக்கி கொள்கிறது
கண்ணீர் துடைக்கிறது அருகிருந்து ஆறுதலாய் தலை தடவிக் கொள்கிறது..
இனிய சொற்கள் பாரம் அற்றவை உங்களிடமிருந்து அவை பறந்து போவதையும் கேட்பவர் அதை அன்போடு ஏந்தி கொள்வதையும் உணர்ந்திருக்கிறீர்களா..
இனிய சொற்கள் வஞ்சகம் கோபம் பொறாமையென வேண்டாத ஒன்றையும் பூசிக் கொள்வது இல்லை
அதனால் சூடாகி எரிவதில்லை.
அன்பெனும் பனிநீர் தோய்ந்து
குளுமையாய் இதயம் போர்த்துகிறது
அன்பின் சொற்கள் ஒவ்வொன்றும் ஈரமான கவிதையாகிறது .
அது பேசுபவனை தெய்வமென செய்கிறது...
துயர் அடைந்தோர்க்கும் நோய்நலிந்தோற்கும் மனம் சலித்தோர்க்கும்
அன்பின் சொற்கள் உயிர் நீராகிறது.
சோகம் தீர்த்து
தழைத்திட செய்கிறது.
அன்பின் சொற்கள்
மென்மையானவை
ஒலி குறைந்தவை ஆயினும் பண்பினால் நிரம்பி வழிபவை
ம்ம் இனியென்ன காலை முதல் இரவு வரைஇனியன பேசலாம்
..ஆரம்பிக்கலாமா
"காலை வணக்கம்"
"உங்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்"
அல்லது
சந்திபவர் உங்கள் மனதிற்கு மிக நெருக்கமானவராக இருந்தால் இப்படி ஆரம்பிக்கலாம் __
"உன் கண்களில் நிரம்பி வழிகிற கவிதையில் நானும் ஒரு சொல்லாகியிருக்கிறேன்...
No comments:
Post a Comment