INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Friday, September 4, 2026

IYARKKAI

 A POEM BY 

IYARKKAI


Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

NOISY FOLKS

Wonder why

the puppy is given

another name


Even Dog is a name

given by someone sometime


Someone who doesn’t like someone

Someone who doesn’t admire someone

Someone who fears someone 

would dominate

give another name to dog

and feel relieved somewhat.


Dog

being Dog

and being not that

what would it be to 

a dog in fact


For those coming in front _

Master

Lady of the House

Kids

Those seated in the lap of old age

For one and all

exclusive  ‘wagging tail’


How so exclusive names!

How would one and all

view their other name in all


Mutually 

Nameless.


ஓசை மாந்தர்

*****************

எதனாலோ தெரியவில்லை

ஒரு நாய்க் குட்டிக்கு

வேறு பெயர் வைக்கப்படுகிறது.


நாய் என்பதும்

யாரோ வைத்த பெயர்தான்.


யாரோவை இரசிக்காத

யாரோவை விரும்பாத

அல்லது

யாரோ மேலாதிக்கம் செய்திடுவார்கள்

என்றஞ்சுகிற யாரோ

ஒரு நாய்க்கு

என்னவோ பெயரிட்டு

ஆசுவாசம் அடைகிறார்கள்.


நாய்

நாய் என்பது பற்றி

வேறேதோ என்பது பற்றி

என்னவாக இருக்கும்.


எதிர்படும்

எஜமான்

எஜமானி

குழந்தைகள்

முதுமையின் மடியிலிருப்போர்

எல்லோருக்கும்

பிரத்தியேகக் குழைதல்.


எவ்வளவு பிரத்தியேகமான

பெயர்கள்.


யாருக்கும்

அவர்களது

அந்தப் பெயர் பற்றி

என்னவாக இருக்கும்.


பரஸ்பரம்

பெயரற்றவர்கள்.


 இயற்கை

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - AUGUST 2026

 INSIGHT AUGUST, 2026 (a bilingual blogspot for contemproary tamil poetry) 2026insight.blogspot.com