INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Sunday, June 27, 2021

THAMIZHNATHY

 A POEM BY

THAMIZHNATHY


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


In the morning a flower blooms inside me
As big as a Sunflower
Till midday it goes on spreading its petals
more and more and more…..
Taking hold of an imaginary form
I dance whirling.
Calling “Oh, my precious darling!”
a melting kiss on the crest of Life.
Then….
At dusk darkness shrouds
From its hole comes the rustling of Memory-serpentine.
I have neither the strength nor the vigour
to strangle and end the day.
Till it turns still on its own
waiting with dark-filled eyes.
The next morn
piercing through the curtains
Sun’s ray come right up to the bed
caressing the cheek cozily.
Opening wide its petals and blooming again as ever
_ the flower.
The dance with the day.
Twilight hour _
It is quite a distance away
Let’s dance all the way!

Thamizhnathy Nathy

காலையில் எனக்குள் ஒரு பூ மலர்கிறது
சூரியகாந்தி அளவு பெரிது
மதியம்வரை விரிந்து... விரிந்து... விரிந்து...
கற்பனையுருவொன்றின்
கைபிடித்துச் சுழன்றாடுகிறேன்
"செல்லமே!" என விளித்து
வாழ்வின் உச்சந்தலையில் ஒரு ஈரமுத்தம்.
பிறகு...
அந்தியில் இருள் சூழ்கிறது
புற்றிலிருந்து நினைவரவம் சரசரக்கிறது
பொழுதின் கழுத்தைத் திருகி முடித்துவைக்கும்
திராணி எனக்கில்லை
அதுவாய் மடிந்து அடங்கும்வரை
இருளடர்ந்த கண்களுடன் காத்திருப்பு.
மறுநாள் காலை
கதிர், திரைச்சீலைகளை ஊடறுத்து
உள்வந்து ஒளிர்கிறது
படுக்கைவரை வந்து
கன்னம் தடவி இழைகிறது
மீண்டும் மதாளித்து மலரும் பூ
நாளோடான நடனம்
அந்தி...
அதற்கின்னும் நேரம் உள்ளது
அதுவரை நாம் ஆடலாமே!

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024