INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Sunday, June 27, 2021

UMA SHANIKA

 A POEM BY

UMA SHANIKA

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


THE POINTER FINGER
I knew myself
Till this moment i had believed so.
When I set out to write
who I am
I knew nothing about myself
Or that which I had considered myself
turned out a bluff.
What caused it?
When I touched those minutes/hours
stuck on those moments I had wasted
my palms became slimy
Shaking off when i moved away
the bundle of soled cloth i was carrying
on my shoulders
weighed heavy.
The tales I had so far collected and stored
little by little
turning dirty, dirtier,
hardened into a heap.
Taking one by one
I spread them on the clothesline.
The stench eaten away by the wind.
Now who I am
became known to all of them.
me including?

சுட்டும் விரல்

என்னை நான் அறிந்திருந்தேன்
இந்தக் கணம் வரை
அப்படித்தான் நம்பினேன்.
என்னைப் பற்றி
நான் யாரென
எழுத முனைந்து போது
என்னைப் பற்றி எனக்கு தெரிந்திருக்கவில்லை
அல்லது
நான் நானென நினைத்தது
நானாகவிருக்கவில்லை.
அது எப்படி நிகழ்ந்தது?
நான் விரயம் செய்த
கணங்களில் திட்டுத் திட்டாக
ஒட்டியிருந்த மணித்துளிகளைத்
தொட்ட போது
கைகள் பிசுபிசுத்தன.
உதறித் தள்ளி நகர்ந்த போது
எனது தோள்களில் சுமக்கும்
அழுக்குத் துணிமூட்டை கனத்தது.
நான் சிறுகச் சிறுகச்
சேகரித்து வைத்த
கதைகள்
அழுக்காகி அழுக்காகி
இறுகிக் குவியலாய். .
ஒவ்வொன்றாக எடுத்து
கொடியில் படரவிட்டேன்.
நாற்றத்தைக் காற்று தின்றது.
இப்போது நான் யாரென்பது
எல்லோருக்கும் தெரிந்தது.
எனக்கும்?

உமா

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024