TWO POEMS BY
PON ILAVENIL B
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
sound thus?
As the gait of tiger
entering into the rigid jungle
the sorrow is taking place.
In those visuals of birds flying off
know not where
my dream too being in their midst
_ none knows.
In those moments chanting the hymns of nape
everything was lost.
Whither gone the voice
that remained there writing the quietude.
In the din and noise of the speeding vehicles
In the secrets of the sky
In the wonders of the sea
In the rage of the sun
Where had it gone lost
Amidst what
Know not.
Eventually
my choking sorrow
stands utterly defenseless
at the altar of Poetry.
Pon Elavenil B
எங்கு போனது
______
இருதயத்தின் ஓசைகள்
ஏன் இவ்வாறு ஒலிக்கிறது
கானகத்தின்
இறுக்கத்தில் நுழையும்
புலியின்
நடையைப்போல
நிகழ்ந்து கொண்டிருக்கிறது
துயரம்
எங்கோ பறந்து சென்று கொண்டிருக்கும்
பறவைகளின் காட்சிகளில்
என் கனவும்
இடையில் இருந்தது
யாருக்குத் தெரியும்
நிமிர நேரமில்லாத பின்னங்கழுத்தின் வசனங்களை
உச்சரித்துக் கொண்டிருக்கும்
நேரங்களில்
தொலைந்து போனது
எல்லாம்
இருந்து
மெளனத்தை எழுதிய குரல்
எங்கு போனது
வாகன இரைச்சல்களில்
வானத்தின் இரகசியங்களில்
கடலின் வியப்புகளில்
வெய்யிலின் தீவிரத்தில்
மேலும்
எதன்களின் இடையில்
தொலைந்து போனதோ
தெரியவில்லை
மூச்சு முட்டும் என் துக்கம்
இறுதியாக
கவிதைகளிடம் நிற்கதியாய் நிற்கிறது.
With me remaining alone in my path
You wade through my pathways going past me.
Through the window
Sorrow
gets inside as the sun’s rays.
You enjoy viewing the luscious green
seen on your side
The rain pours down as
my pain.
You enjoy the sight of the sloping lines
of droplets.
Your train goes crossing
my passage.
None in front.
Nor en route.
My trail yearns to entrust in your hands
all my losses.
But you take leave
not knowing the language.
In the torrential downpour
You don’t get wet
one bit.
Your train takes thee all too fast
in your course.
Rain everywhere
drenching me to the core.
Pon Elavenil B
வழி நெடுக மழை
______
ஆளுக்கொரு பாதை என்று ஆகிவிட்டது
என்பாதையில் நான் மட்டும் அங்கேயே நிற்க
என் வழித்தடங்களில் கடந்து
போகிறாய்
சாளரத்தின் வழியே சோகம்
வெய்யிலாக உள் இறங்குகிறது
உன் பக்கம் இருந்து பசுமைகளை
ரசித்துப் பார்க்கிறாய்
மழை என் வலியாய்ப் பெய்கிறது
துளிகளின் சாய் கோடுகளை ரசித்துக் கொண்டு இருக்கிறாய்
உனது இரயில் எனது பாதையை கடந்து செல்கிறது
எதிரே
யாரும் இல்லை
இடையிலும் யாருமில்லை
தனியே
என் பாதை எனக்கான இழப்புகளை
உன்னிடம் சேர்க்க விழைகிறது
நீயோ மொழி அறியாது
விடை பெறுகிறாய்
சடச் சட வென கொட்டும் மழையில்
நீ நனையவே இல்லை
உன் இரயில் உன் திசையில் விரைவாக கொண்டு செல்கிறது
வழி நெடுக மழை
எனை முழுக்க நனைக்கிறது
No comments:
Post a Comment