A POEM BY
YAVANIKA SRIRAM
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
should travel with their dry-mouthed puppies in hot summer searching for brook –water.
Softening the grain-flours as dust
would prove soothing to children’s milk-teeth.
Further mixing clay with it and adding pungent flavor
_filling their bellies with it and sending them away
would take care of them till the time
they return home from school.
Outstanding kids would find their way
into the railways station
and almost snatch the things held by the passengers.
No need to be educated for this.
Then they should develop acidity
in low and proper measures.
For carious tooth due to sweets
their mother squeezes the entire tube of
clove-fragrant toothpaste.
One egg half-a-cup milk balanced diet.
Waking up the next dawn
have the children grown
Our children have never stood in comparison
with those in the neighbourhood.
The grown-ups chitchatting about their fruits and food
is sheer waste
In petrol bunks petty shops
motels and fast food outlets during joy-tours_
the oven should always be on
munching of grains should go on
rhizomes meat pastries
before they scream
Yavanika Sriram
குழந்தைகளுக்கு உணவு தயாரிப்பவர்கள்
கடும் கோடை காலத்தில் வாய் உலர்ந்த நாய்க்குட்டிகளோடு சுனைநீர் தேடிப் பயணிக்க வேண்டும்
தானிய மாவுகளை தூசுபோல ரொட்டிக்கு மென்மையாக்குவது குழந்தைகளின்
பால் பற்களுக்கு இதமானது
மேலும் அதில் களி மண்ணை கலந்து காரமிட்டு
அவர்களின் வயிற்றை நிறைத்து அனுப்புவது
பள்ளிக்கல்வியிலிருந்து வீடு திரும்பும் காலத்திற்கும் போதுமானது
மிகச்சிறந்த குழந்தைகள் இரயில் நிற்கும் நிலையத்திற்குள் புகுந்து பயணிகளின் கையில் உள்ள பண்டங்களை ஏறக்குறைய பறித்துக்கொள்கிறார்கள்
இதற்கு கல்வி தேவையில்லை
பிறகு அவர் காரத்தை குறைவாக
சரியாகப் பயில வேண்டும்
இனிப்புகளால் பற்களில் சொத்தை
உண்டாகும் போது அவர்களின் வாய்க்குள் கிராம்பு பணக்கும் முழுப் பேஸ்டையும் அம்மா பிதுக்கிவிடுகிறாள்
ஒருமுமுட்டை அரைக்கப் பால் சரிவிகித உணவு
அதிகாலை எழுந்தவுடன் குழந்தைகள் வளர்ந்து விட்டுருக்கிறார்களா
நமது பிள்ளைகள்
அண்டை வீட்டாரிடமிருந்து
ஒருபோதும் ஒப்பு நோக்கப்படாதவர்கள்
பெரியவர்கள் தங்களின் பழம் உணவுகள் பற்றி கதைப்பது
அநாவசியமானது
பெட்ரோல் பங்கிலும் பெட்டிக்கடைகளிலும்
மோட்டல்களிலும் உல்லாசப்பயணங்களின் போது துரித உணவங்களிலும்
அடுப்பு சதா எரிந்து கொண்டிருக்கவேண்டும்
தானியங்கள் அரைபடவேண்டும்
கிழங்குகள் இறைச்சிகள் பணியாரங்கள்
அவர்கள் கூச்சலிடும் முன்
No comments:
Post a Comment