TWO POEMS BY
PAALAINILAVAN
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
C.Mohan’s age is illusory, I hold..
The love of C.Mohan who is
sitting on the stairs of climbing down
from one stage to another stage of life
is overflowing in many a Krishnaleela.
C.Mohan’s beloveds
tread with the feet of cat
along the obscure space
and go disappearing inside
hideouts aplenty.
C.Mohan’s room is not c.Mohan’s
It is the dream-room where his beloveds sleep.
In that cabin
an artist immersed in hunger and love
keeps on drawing love
for ever and ever.
Poets often come there
and light the fire of love
leaving us terror-struck.
A sculptor has come to ask
how to sculpt in stone
ecstasy incomprehensible.
C.Mohan counsels him saying that
at least for a few years
he should fall in love
and suffer.
Fiction writers wearing magical spectacles
search for C.Mohan in his room
The young woman pouring wine
into empty cups turning them
brimming and overflowing
says that C.Mohan means eternal lover.
“Where is the lover?”
C.Mohan roars.
As he comes with the smell of King’s cigarette
and the laughing sound of his mockery
the room agitates vibrantly.
A budding poet has come to see C.Mohan, he is told.
That person has come sporting G.Nagarajan’s moustache.
In his jolna bag
a notebook with poems unpublished
is crouching with bird’s feathers.
When C.Mohan comes out and places his hand
round his shoulder
the rain pouring within him
falls down as big round droplets and scatters.
The youth feeling fantastically chill
in rain’s glassy strands of thread asks
“Mohan sir, today is your birthday.
May I read out a poem?”
“Oh, sure.
Can read poem on all days, why not?”
says C.Mohan.
Along the path where lovers tread
Time is the evergreen leaf of a moist plant
Rain’s wetness.
a blossom.
As it drips water on the lovers’ bodies
before they could take a step
entwining their hands
Where had the thousand
flowers
bloomed
and vanished…….
Dedicated to C.Mohan on his birthday)
பச்சை பசேல் இலை
சி மோகனுக்கு
வயதாவதில்லை
சி மோகனுடைய வயது
ஒரு தோற்ற மயக்கம்
ஒரு பருவத்திலிருந்து
இன்னொரு பருவத்திலிறங்கும்
படிக்கட்டில்
அமர்ந்துள்ள
சி மோகனின்
காதல்
ஸ்ரீ கிருஷ்ணனின்
லீலைகளில் பெருக்கெடுக்கிறது
சி மோகனின்
காதலிகள்
அரூப வெளியில்
பூனைக் கால்களுடன்
ரகசிய ஒளிப்பிடங்களில் மறைகிறார்கள்
சி மோகனுடைய அறை
சி மோகனுடையதல்ல
புனைவுக் காதலிகள் துயலும்
கனவு அறை அது.
அந்த அறையில்
ஓவியனொருவன்
பசியிலும் அன்பிலும் கரைந்து
சதாவும் காதலை வரைந்தபடியுள்ளான்
கவிஞர்கள்
அடிக்கடி வந்து
திகிலூட்டும் படி
காதல் தீ மூட்டுகிறார்கள்
சிற்பியொருவன்
இனம் புரியாத பரவசத்தை எப்படி கல்லில செதுக்குவதென்று
கேட்க வந்திருக்கிறான்
சி மோகன
சில வருடங்களேனும்
காதலில் விழுந்து துயரடையும்படி
அவனுக்கு ஆலோசனை வழங்குகிறார்
.நுட்பங் கூடிய மாயக்கண்ணாடி
அணிந்துள்ள
புனைகதை எழுத்தாளர்கள்
சி மோகனை
அவருடைய அறையில் தேடுகிறார்கள்
காலிக்கோப்பைகள்
நிரம்பி வழிய
மது ரசத்தை ஊற்றிக் கொண்டிருக்கும்
யுவதி
சி மோகன் என்றால்
நித்திய காதலன் என்று
பொருள் என்கிறாள்
காதலன் எங்கே என கூச்சலிடுகின்றனர்
சி மோகன்
கிங்ஸ் சிகரெட்புகையுடனும்
பிரத்யேகமான பகடியின் நகைப்பொலியுடனும் வர
அறை துடிதுடிக்கிறது
சி மோகனை சந்திக்க
ஓர் இளங்கவிஞர்
வந்திருப்பதாக சொல்லப்படுகிறது
அவன் ஜி நாகராஜனின்
மீசையுடன் வந்திருக்கிறான்
ஜோல்னா பையில்
பிரசுரமாகாத ஒரு கவிதை நோட்டு
பறவைகளின் சிறகுகளுடன் பதுங்கியிருக்கிறது
சி மோகன்
வெளியே வந்து அவன்
தோளில் கைபோட்டதும்
அவனுக்குள் பெய்த
மழை
வெளியே பெரிய பெரிய
துளிகளாக
விழுந்து சிதறுகிறது
மழையின்
கண்ணாடி நூல் இழைகளில்
அதீதமாக குளிர்ந்து கொண்டே
மோகன் சார்
"இன்று உங்கள் பிறந்த நாள்
நான்
ஒரு கவிதை படிக்கலாமா" என்கிறான்
"ஓ தாராளமாக
எல்லா நாளும் கவிதை படிக்கலாமே*
என்கிறார் சி மோகன்
காதலர்கள் நடந்து செல்லும் பாதையில்
காலம்
ஈரமான செடியின்
பச்சை பசேல் இலை.
மழையின் ஈரம்
ஒரு பூ
அது காதலர்களின் உடலில்
ஈரம் சொட்ட
அவர்கள் தங்கள் கரங்களை கோர்த்து
ஒரு அடி எடுத்துவைப்பதற்குள்
ஆயிரம்
பூ
எங்கே மலர்ந்து
எங்கே மறைந்தது......
பாலைநிலவன்
(சி மோகனுக்கு)
2. THE GOLDEN FISH
the sparrow perching on the cocoanut leaf-stalk
sings the bliss
The cat that usually sits at the feet
with eyes half-closed
so nurturing love
is not to be seen.
In the glass tank
a gold fish floats lifeless.
Once my daughter wakes up
she would sob the whole day.
If I bury this golden fish
and declare that it had mysteriously vanished
in the night
that would be a sin.
Easier than that is to buy
another gold fish
looking exactly like this
and leave it in the tank
before she wakes up.
Then
in order to prevent her from finding out
this foul deed
sprinkling more eatables
all too often
I should see to it that the fish flies
with zest and vigour
in the glassy water.
If by any chance this fish floats more elegantly
and so expose my trickery
I could be penalized by my daughter dear
for a long period
- all for a tiny fish.
Please pray for me, Father
The day when my daughter finds me
a liar
my soul would paint itself black.
On that day the pit
where I had buried the golden fish
unknown to my daughter dear
I would dig a little deeper
and hide myself in it _
O Father.
Paalainilavan Nilavan
தங்க மீன்
திரைச்சீலையை
திறந்ததும்
தென்னங்கீற்றில்
அமர்ந்திருந்த குருவி
ஆனந்தத்தைப் பாடுகிறது
வழக்கம்போல
காலடியில்
கண் சொருகி
அன்பை பேணும் பூனையை காணோம்
கண்ணாடித் தொட்டியில்
ஒரு தங்க மீன் இறந்து மிதக்கிறது
மகள்
எழுந்தால்
இந்த நாள் முழுதும் அழுவாள்
நான் இந்த
இந்த தங்க மீனை
புதைத்துவிட்டு
அது
இரவில் மர்மமாக காணாமல் போய்விட்டது
என்று
சொன்னால்
அது பாவமாகிவிடும்
அதை விட எளிது
நான்
அதே போன்ற
ஒரு தங்க நிற மீனை
வாங்கி
அவள் எழுந்து பார்ப்பதற்குள்
தொட்டியில் விட வேண்டும்
பின்
இந்த பொய்யான
நடவடிக்கையை
அவள்
கண்டுபிடிக்காமலிருக்க
அதிக தீனிகளை
அடிக்கடி தூவி
மீனை
எப்போது சுறுசுறுப்பாக
கண்ணாடி வெள்ளத்தில்
பறக்கும்படி
பார்த்துக் கொள்ள வேண்டும்
ஒரு வேளை
இந்த மீன் அதிக சோபையாக
மிதந்து
என்னை காட்டிக்கொடுத்தால்
ஒரு குட்டி மீனுக்காக
என் மகளால்
நான்
அதிக காலம்
தண்டிக்கப்பட நேரலாம்
எனக்காக
வேண்டிக்கொள்ளுங்கள் ஃபாதர்
என்
மகள்
என்னை பொய்யனென்று
கண்டுபிடிக்கும் நாளில்
என் ஆன்மா
தனக்குத்தானே கரியை பூசிக்கொள்ளும்
அந்த நாளில்
மகளுக்கு
தெரியாமல் புதைத்த
தங்க மீனின் குழியை
சற்றே
ஆழமாக தோண்டி
அங்கே ஒளிந்து கொள்வேன் ஃபாதர்
No comments:
Post a Comment