A POEM BY
LEENA MANIMEKALAI
and flies past
_ My Being.
The art of
eating one’s own smell
for survival
I taught the wind
that got into my cabin
in a wisp
Overjoyed the wind took me
to the open space.
Seeing the abundant sky
My flying choked
and coiled, Oh my!
The trail back to the cave
escaped the eyes.
The wind that accompanied me
was nowhere.
The trance of finding another cave
surrounded by demons
raved and ripped off its tresses.
The wings
with blue blood gushing inside
turned resolute.
Beaks appeared
in the shape of prey..
Amidst the clouds
flooded
the scent of a new bird.
புலப்படாத பாதை
குகையின் இருட்டை
இடித்துப்பறக்கும் வௌவாலென
இருப்பு
தன் வாசத்தையே
தின்று வாழும் கலையை
ஒரு நாள்
கீற்றென நுழைந்த
காற்றுக்கு படிப்பித்தேன்
மகிழ்ந்த காற்று என்னை
வெட்டவெளிக்கு
அழைத்துச் சென்றது
கொட்டிக் கிடந்த வானம்
பார்த்து திக்கித்த
பறத்தல் சுருண்டது
குகைக்குத் திரும்பும்
பாதை புலப்படவில்லை
பற்றி வந்த காற்றைக் காணவில்லை
பேய்களைக் கவித்து
இன்னொரு குகை
காணும் மோனம்
தன் கூந்தலை அறுத்துக்கொண்டது
நீலக் குருதி பாய்ந்த
இறக்கைகள்
தீர்மானம் பெற்றன
இரையின் வடிவத்தில் அலகுகள் தோன்றின
மேகங்களிடையே மண்டியது
புதிய பறவையின் வாசம்
_ லீனா மணிமேகலை
No comments:
Post a Comment