A POEM BY
NUHA
The soulful tune
heard daily at the hour
when the day retires
in the prevailing quietude
and the beats of wings
launching
flooding in the fountain of language golden
turning moist at the rim of ear
it would trickle as droplets at the nape.
In the quivering spinal cord
and palms turning cold
anxiety would be crouching like black cat.
In the green-lines that the soft plumes
of the song pervading everywhere
as luscious swell of paddy shoots
scratched along the wind’s wavy stirs
blood would gush forth everywhere.
Unruffled by all these
as a seer to the core
the start and finish of the fairy song
would go lilting and leaping all along
crisscrossing across the graph of
oceans and woodlands.
தேவதையின் பாடலை செவியேற்றதுண்டா
தினமும் ஊரடங்கும் மௌனவெளியில் இறகுகளின் தாளம் தொடக்கிவைக்கும் ஜீவராகம்
மஞ்சள் மொழியின் ஊற்றில் பிரவாகித்து
காதோரம் ஈரலித்து பின்னங்கழுத்தில் திவலைகளாய் வழிந்தோடும்
சிலிர்த்த முள்ளந்தண்டிலும்
சில்லிட்ட உள்ளங்கையிலும் பதட்டம் கறுத்தப் பூனையாய் பதுங்கியிருக்கும்
திரண்ட நெற்கதிராய் விளைந்துகிடக்கும் பாடலின் மெல்லிய தோகைகள் காற்றின் அலைவுகளில் கீறிவிட்ட பச்சைக்கோடுகளில்
வழிந்தோடும் இரத்தவீச்சம்
எதையும் பொருட்படுத்தாத தேவதைப்பாடலின் தொடக்கமும் முடிவும் காடும் கடலுமென்ற வரைபடத்தில் தாவிச்செல்லும்
ஒரு பழுத்த தவசியாய்
நுஹா
No comments:
Post a Comment