INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Sunday, June 27, 2021

RIYAS QURANA

 A POEM BY

RIYAS QURANA

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
MEANWHILE, LET’S MEET IN MEMORY’S SUBWAY
On a sleepless night
He dreamt of standing in a room
Of a house on the verge of ruin
Blue hue and brush
He had in hand
An unknown voice commanded him continuously
to paint the room -wall in black.
How is it possible to paint black with blue hue
He wondered
and at that he woke up.
Soon as he woke up those words came to his mind.
That astonishment went on mounting.
He was reflecting
His bedroom began to turn into a replica
Of the room in the house he dreamt of.
He began drawing the scene
that amazed him.
whichever colour he used
turning black
gave a forewarning of this being the impending dream
of the first rainy day to come.
For now
He is I.

Riyas Qurana


அதற்கிடையில், நினைவின்
சுரங்கப் பாதையில் சந்திப்போம்.
---------------------------------
தூக்கமற்றிருந்த ஒரு நாள் இரவு,
இடிந்து விழும் நிலையில் உள்ள வீட்டின்
ஒரு அறையில் நிற்பதாக
அவர் கனவு கண்டார்.
நீல நிற வர்ண மையும் தூரிகையும்
கையில் இருந்தது.
ஒரு அறியாத குரல்
அறைச் சுவருக்குக் கறுப்பு மை பூசும்படி
தொடர்ச்சியாகக் கட்டளையிட்டது
நீலத்தைக்கொண்டு கறுப்பைப் பூசுவது
எப்படிச் சாத்தியம் என யோசித்தார்
அப்படியே கண்விழித்துவிட்டார்
எழுந்ததும், அந்த வார்த்தைகளை
நினைக்க வேண்டி வந்தது
அந்தத் திகைப்பு இன்னும்
வளர்ந்து கொண்டே இருந்தது
அவர் பிரதிபலித்துக்கொண்டிருந்தார்
கனவு கண்ட வீட்டின் அறைபோல
படுக்கையறை மாறத்தொடங்கியது
அவர் வியந்த காட்சியை
வரையத் தொடங்கினார்.
எந்த வர்ணத்தைப் பயன்படுத்தினாலும்
அது கறுப்பாக மாறியது
எதிர் வரும் முதலாவது மழை நாளில்
வர இருக்கின்ற கனவு இது என்ற
முன்னறிவித்தல் ஒன்றை தந்தது
அவர் என்பது இப்போதைக்கு நான்.

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE