A POEM BY
KALA PUVAN
Massive expanse of water
Moon’s mirror
The seed of rain-cloud
Gem of a woman concealing pearls
deep inside her blue-body
Ships’ circular pathway
The swimming pool of fishes
Great grand palace of turtles.
Water-bridge linking shores galore.
Retiring spot of crabs.
The primordial mother yielding conches.
Watery jungle having volcanoes within
An evergreen young woman who devours the ashes
of the dead and disappeared.
Benign mother who cradles the catamarans.
A lovely lass unperturbed by Sun’s heat
and never turning hot
giggling gaily.
The queen of cool having waves as curly hair.
None has gauged the Sea.
A conjurer unparalleled who made fantasy voyages
real to the sailors
The whales’ lagoon.
Hanuman crossed the sea, they say.
We really do it every day
(voyaging in ships)
Waves never cease to be in the sea
So our thoughts continue to be
So does Love on the land, you see.
Amen.
Kala Puvan
கடல்
பரந்த நீர்ப்பரப்பு
நிலா முகம் பார்க்கும் கண்ணாடி
மழை மேகத்தின் விதை
ஆழ முத்துக்களை நீல உடலுக்குள் மறைத்து வைத்த
மாதரசி
கப்பல்களின் நீள வட்டச்சாலை
மீன்களின் நீச்சல் குளம்
கடல் ஆமைகளின் மாபெரும் மாளிகை
பல கரைகளை இணைக்கும் தண்ணீர் பாலம்
நண்டுகளின் ஒதுங்குமிடம்
சங்குகளை விளைவிக்கும் ஆதித்தாய்
எரிமலைகளை உள்ளடக்கிய நீர்க்காடு
மறைந்தவர்களின் அஸ்தியை சாப்பிடும் பேரிளம் பெண்
கட்டுமரங்களை தாலாட்டும் அன்னை
கதிரவன் வெப்பத்தால் கலக்கமுறாது ,சூடாகாது
சிரிக்கும் சுந்தரி
அலைகளை கூந்தலாய் கொண்ட குளிர்நாயகி
கடலை அளந்தவர்கள் இல்லை
கற்பனை பயணங்களை மாலுமிகளுக்கு நிஜமாக்கிய
மாபெரும் வித்தைக்காரி
திமிங்கிலங்களின் தடாகம்
அனுமான் கடலை தாண்டியதாகச் சொல்கிறார்கள்
ஆனால் நாம் நிஜத்தில் தாண்டிக்கொண்டு தான் இருக்கிறோம் (கப்பல்களில் )
அலைகள் ஓய்வதில்லை கடலில்
எண்ணங்கள் ஓய்வதில்லை மனதில்
காதல்கள் ஓய்வதில்லை நிலத்தில் !!!
ஆமென்.
கலா புவன் – லண்டன்
No comments:
Post a Comment