INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Sunday, June 27, 2021

PAADHASAARI

 A POEM BY

PAADHASAARI

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

OLD AGE


Of the three realities
of Life called
Ailment Old Age and death
Ailment and death would draw closer
any time sooner or later
But Old Age would arrive at us
calm and composed
in well-balanced pace.
Unlike the handshake of a sudden meeting
Old age would embrace us in a wholesome manner.
Bearing the permanence of Love
Old Age walks ahead with steady steps.
It journeys with a pleasant countenance
breathing naturally.
Old age is something that never loses
Root’s fragrance.
It never occurs in startling coincidence.
The fruition of patience is Old age;
That which bears the seeds of
benevolence in the fruit.
Yet in its lifetime
my parents’ elderliness
today fears
just a lone Virus.

மூப்பு
பிணி மூப்பு சாக்காடு எனும்
மும்மெய்மையில்
பிணியும் சாக்காடும்
எப்போது எனினும்
நெருங்கலாம்.
மூப்போ பதற்றமின்றி
ஒரே சீர்மையில் வந்தடையும்.
திடீர் சந்திப்பின்
ஒரு கைகுலுக்கல் போலின்றி
முழுமையாக
ஆரத்தழுவிக்கொள்வது மூப்பு
அன்பின் அமரத்துவம் ஏந்தி
நிதானமாக நடப்பது மூப்பு
இயற்கையின் சுவாசத்தில்
இன்முகமாகப் பயணிப்பது
மூப்பு
வேரின் மணத்தை இழக்காதது
மூப்பு
திடுக்கிடும் தற்செயல்களில்
நேரிடாது மூப்பு
பொறுமையின் திரள்கனி மூப்பு
கனியில் கருணையின்
விதைகள் தாங்கியது
மூப்பு
எனினும் வாழ்நாளில் இன்று
தீநுண்மி ஒன்றுக்கு மட்டுமே
அஞ்சுமே
என் தாய் தந்தை மூப்பு,
- பாதசாரி

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024