INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Sunday, June 27, 2021

PALANI VELL

 (Excerpts from)

A POEM BY PALANI VELL

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)



THE WHALE

Prevent the basket of salt-selling females
from going to the museum
by giving it to the fisher-women
who struggle with their wet firewood
to light the oven.
If by any chance we desire not
the coral that the fishermen
After tying their boats
offer as they free the nets
from their entangled state and drying them
we might find the abodes of mermaids.
And also
the whale forsaken by the sea
turning into a slide for the lads
and chokes
for the third day
as the stench of death
with the lads stuffing the popcorn bits and pieces
in their mouth
the forest-rangers shout into the wireless asking
whether marine species can be included in the
Forest Department.
After it was said that the meat wouldn’t be tasty
It starts drizzling.
Sand enters into its body
(else)
The women collecting corals
have seen
the whale-trail proceeding
with destination being
the fish showing the way
deep down the sea.
Fishes showing the route
as the Buffoon actor also joins them
and leaves it in the Sea,
In the shore with the leftovers of whale
Imprint of Isotopes.
(else)
In stench the village remains
deserted.
The dogs barked exhaustively
started howling.
With many a carnivores pursuing
the archeological wizards are waiting
to take its bones
covering their nose
(this too that)
When the buffoon conducting the mermaid-play
doing a somersault and rolling over the fin-cloth
For the coral-collecting women
the tail of whale that goes chasing the small fishes
upon the quiet surface of the sea
Is seen.
For the men who couldn’t swim
while those pregnant hatching the little ones
and returning
the dream of fishing sans fighting
lingers in the sea.
The sand feels warm
for anyone to mould it
The lads
dragging the dogs and waves
from shore to sea
carefree
play munching popcorn.
The moon on its own
with no rhyme or reason
churning the sea and showers nectar
upon the mermaid
(this too that)
The nectar that the Celestial beings churned
remaining in the sea
The moment it called salt
the taste well-soaked in it
turning into lust flutters on the eyelid
in both genders
Lust excessive not in sea but in tears
may swell
Well
simply love _
be it tears or salt _
not identifying it as gratitude loyalty
so on and so forth.
The lips of the mermaid who speaks thus
is swollen with innumerable kisses.

திமிங்கிலம்
——————
உமணத்திகளின் கூடையை
மியூசியத்திற்குப் போகாதவாறு
ஈர விறகுகளோடு
மல்லுக்கட்டும்
மீனவச்சிகளுக்கு
எரிக்கத் தாருங்கள்
வெதுவெதுப்பான நீரைத் தேடும்
சினைமீன்கள் குஞ்சு பொறிப்பதற்காக
படகைக் கட்டிவைத்த மீனவர்கள்
வலைகளை சிக்குலர்த்தியவாறே
தரும் பவளத்தை
வேண்டாதிருப்போமானால்
கடல்கன்னிகளின் இருப்பிடத்தை
அறியலாம்
அதோடு
கடல் கைவிட்ட திமிங்கிலம்
சிறுவர்களுக்குச் சருக்குமரமாகி
மூச்சுத் திணறுகிறது
மூன்றாம் நாளாக
இறப்பின் நாற்றம் போலும்
பிள்ளைகள் பொப்கார்ன் உதிரிகளை
வாயில் நுழைக்க
வனக்காவலர்கள் ‘கத்தி’ கேட்கின்றனர்
வயர்லெஸில்
கடல்வாழ் பிராணிகளை வன இலாகாவில்
சேர்க்க இயலுமாவென
கறி சுவைக்காதென்றபின் பின்
மழை தூறுகிறது
மணல் புகுகிறது அதனுடலுள்
(வேறு)
பவளம் சேகரிக்கும் பெண்கள்
பார்த்ததுண்டு
ஆழகடலில் திசைகாட்டி மீன்களை
இலக்காக வைத்துப்போகும் திமிங்கலப் பாதையை
அவர்களோடு பபூன் நடிகரும் சேர்ந்து
கடல்சேர்க்க
திமிங்கலம் மீந்த கரையில்
ஐசோடோப்புகளின் தடயம்
(வேறு)
நாற்றத்தில் வெறிச்சோடிக் கிடக்கறது
கிராமம்
நாய்கள் குரைத்துச் சோர்ந்து
ஊளையிடத் துவங்கிவிட்டன
மாமிசப்பட்சிணிகள் தொடர்ந்து வர
தொல்லியல் வல்லுனர்கள் அதனெலும்பைக் கொண்டு செல்லக்
காத்திருக்கின்றனர்
மூக்கைப் பொத்தியவாறு
(இதுவுமது)
கடல்கன்னி நாடகத்தை
நிகழ்த்தும் பஃபூன்
செதில்துணியைக் குட்டிக்கரணம் போட்டு புரட்டும்போது
பவளம் சேகரிக்கும் பெண்களுக்கு
அமைதியான கடற்பரப்பில்
சின்ன மீன்களை
பின்தொடரும்
திமிங்கிலத்தின் வால் தெரிகிறது
கடலாட முடியாத ஆண்களுக்கோ
சினைகள் குஞ்சு பொறித்து
திரும்பும்போது
சண்டையற்ற மீன்பிடி பற்றிய கனவு
கடல் தவழுகிறது
மணலை யார் வேண்டுமானாலும் வனைய
வெதுவெதுப்பாக இருக்கிறது
சிறுவர்கள்
நாய்களையும் அலைகளையும்
கரைக்கும் கடலுக்கும் இழுத்துச் சென்று
விளையாடுகின்றனர் பொப்கார்ன் தின்றபடி
நிலவு வீணே கடலைக் கடைந்து
அமுதைப் பொழிகிறது
கடற்கன்னி மீது
(இதுவுமது)
தேவர்கள் கடைந்த அமுதம் தப்புங்கடலில்
அது உப்பென்றத் தருணம்
அதில் ஊறிக்கிடக்கும் ருசி
காமமாகி படபடக்கிறது இமையில்
இருபாலரிலும்
மிகைக்காமம் கடலில் அல்ல கண்ணீரில்
பெருகலாம்
லகுவாக
நேசி
கண்ணீரையோ உப்பையோ
நன்றி விசுவாசம் என்று அடையாளப்படுத்தாமல்
இப்படிப் பேசும் கடல்கன்னியின் உதடுகள்
அளவிலா முத்தத்தால் வீங்கியுள்ளது
....

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024