A POEM BY
SRISHANKAR
I listen to.
Then the cawing of crows.
And also
In these days when the sparrows have become extinct
the sound of those times when they sat upon branches
would be heard
Somewhere the call of a cell singing and subsiding
the speeding parrots’ chitchat would shoot as arrows
with the direction unable to spot
the approaching sound of human
would be heard as a secret
Then slowly
from a far off lane
the dog’s bark would echo.
Beyond all these
in the paling direction’s insipid glow
I would hear
a bud opening in the creeper at the entrance;
Her snowy footsteps.
Sri Shankar
*
அப்பால்
*
வைகறைக்கு முந்தைய அமைதியின்மேல்
தொழுவத்து எருமைகள் முக்காரமிடுவதைக் கேட்பதுண்டு
பின்பு
கரையும் காகங்கள்
உடன்
நெற்குருவிகள் அழிக்கப்பட்டுவிட்ட இந்நாட்களில்
அவை
கிளைக்கவைகளில் அமர்ந்தெழுந்தவேளையின் ஓசை எழும்
சிலபோது
எங்கோ ஓர் கைப்பேசி அழைப்பு இசைத்தடங்க
விரையும் கிளிகளின் பேச்சு அம்புகளெனப் பாயும்
திசையைச் சொல்லமுடிந்திராதவாறு
இரகசியம்போலக் கேட்கும் மனித அரவம்
பின் மெல்ல
தூரத் தெருவிலிருந்து எதிரொலிக்கும்
நாய்க்குரைப்பு
இத்தனைக்கும் அப்பால்
நாளின்
வெளிர்கிற திசையின் மங்கலில் கேட்பேன்
வாசற்கொடியில்
மலர் ஒன்றின் முகையவிழ்வதை
அவள் பனிக் காலடிகளை
No comments:
Post a Comment