INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Sunday, June 27, 2021

KATHIR BHARATHI

 A POEM BY

KATHIR BHARATHI

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

THE POET’S BALANCE SHEET
Ah, Arithmetic…
Listen to me.
Don’t be the wife of a wealthy fellow,
wearing a round diamond nose-ring.
keep awake like his mistress.
Triangle Hexagon Octagon _
All are but the collective metathesis of angles.
Angle is that which unwraps from a point
How can they converge?
The square
takes itself to be a Zen master.
But in deep meditation its heart
runs as the very air
helter-skelter
between rectangle and square.
Addition joining Subtraction
Dividing all without multiplying anything
Declare its Remainder
as just this much – nothing more
Do ask
for the Quotient.
The conical flask
wants to brim and overflow.
The Equal To line
feeling proud of being the Parallel line
never listens to words of advice;
nor joining hands with anyone.
Compasses
inserting their sharp tip into its heart
die for the circle.
In your one round there are 60 stops….
With no gratitude nor loyalty
All alight, do you know.
O Math
You’re the Mother of Science.
Convert the single line into a scale
and
spank the children
real hard.
Pythagoras
Ramanujam
Einstein …
and your loyalists
Oh, be they not mistaken
as poets….
let not your hand slacken

Kathir Bharathi

கவிஞனின் கணக்குவழக்கு
............................
கணிதமே
சொல்வதைக் கேள்.
வட்ட வைரமூக்குத்தி அணிந்த
செல்வந்தன் மனைவிபோல் இராதே
அவன் வைப்பாட்டியாக விழித்திரு.
முக்கோணம் அறுகோணம் எண்கோணம்
எல்லாமே
கோணங்களின் கூட்டுப்போலி
புள்ளியில் இருந்து விரிவதே கோணம்
அவை எப்படிக் கூடமுடியும்?
சதுரத்துக்கு
தானொரு ஜென் துறவி என்று நினைப்பு.
ஆனால்
ஆழ்தியானத்தில் அதன் நெஞ்சமோ
சதுரதுக்கும் செவ்வகத்துக்கும்
காற்றாக அலைக்கழிகிறது.
கழித்தலோடு கூட்டல் சேர்ந்துகொண்டு
எதையும் பெருக்காமல்
வகுத்துவிட்டு
இவ்வளவுதான் மீதி என்கின்றன
ஈவு எங்கே என்று கேள்?
கூம்புக்குடுவை
புனலோடு வழிய பிரியப்படுகிறது.
சமக்குறியோ
இணைக்கோடு என்ற இறுமாப்பில்
சொல்பேச்சு கேட்பதில்லை
எவரோடும் சேர்வதில்லை.
கவராயங்கள்
தன் நெஞ்சுக்குள் முள்ளை இறக்கி
வட்டத்துக்குச் சாகின்றன.
உன் ஒரு சுற்றில் 60 நிறுத்தங்கள்...
நன்றி விசுவாசமில்லாம்
எல்லோரும் இறங்கிக்கொள்கிறார்கள்
தெரியுமா?
கணிதமே
நீ விஞ்ஞானத்தின் தாய்.
ஒற்றைக்கோட்டை அடி ஸ்கேலாக்கி
பிள்ளைகளின் புட்டங்களில்
சாத்து சாத்தென்று சாத்து.
பிதாக்கரஸ்
ராமானுஜம்
ஐன்ஸ்டீன்...
இன்னும் பிற உன் விசுவாசிகளை
கவிஞர்கள் என நினைத்துக்
கைநெகிழ்ந்துவிடாதே.



No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE