INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Sunday, June 27, 2021

C.MOHAN

 THREE POEMS BY

C.MOHAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)



1. RIVERLINGO
An alphabet a Word or Words
of Riverlingo
dwell in the pebbles on the shore.
Singing the song of Riverlingo
the fish swim happily.
Not enlightened of the wisdom
of language unknown
I sitting there as an alien
am throwing pebbles into the water
absentmindedly.
The fish taken aback and dispersing
assemble the next instant and
mate fondly.
In the stench of my act
the Riverlingo
scowl and sputter.

நதிமொழி

நதிமொழியின் ஓர் எழுத்து
ஒரு சொல் அல்லது சொற்கள்
கரையோரக் கூழாங்கற்களில்
வாசம் புரிகின்றன.
நதிமொழியின் கீதத்தைப் பாடி
நீந்திக் களிக்கின்றன மீன்கள்
அறியா மொழியின் ஞானமறியாது
அந்நியமாய் அமர்ந்திருக்கும் நான்
எவ்வித ஓர்மையுமின்றிக் கூழாங்கற்களை
நீருக்குள் எறிந்துகொண்டிருக்கிறேன்.
திடுக்கிட்டுச் சிதறிக் கலையும் மீன்கள்
கணப்பொழுதில் மீண்டு
கூடிக் குலவுகின்றன
என் செயலின் துர்நாற்றத்தில்
முகம் சுளித்து சலனிக்கிறது
நதியின் மொழி.
சி. மோகன்


2. THE FLYING CARPET
The flying carpet that my heart
in blissful solitude
has woven and gifted me
is always there
in my possession.
For crossing the desert
that in weariness born of
sheer exhaustion
my heart
spreads
as punishment stringent
forever I have the flying carpet
in my possession.

பறக்கும் கம்பளம்

குதூகலத் தனிமையில்
என் மனம்
பரிசாக நெய்தளித்த
பறக்கும் கம்பளம்
எப்போதுமிருக்கிறது என் வசம்.
அலுப்பில் கருவுற்று
வளரும் சலிப்பில்
என் மனம்
தண்டனையாக விரிக்கும்
பாலைவனத்தைக் கடக்க
எப்போதும் என்வசமிருக்கிறது
பறக்கும் கம்பளம்.

சி. மோகன்


3.AN APPEAL TO MY PALS
I beseech you, my friends
Please stop all those acts
that remind me of my aging fast.
Considering you as my pals
I shower upon you frustration anger envy love lust and all
Like you I too
hatch complaints and grievances
and send them around alive and breathing.
Just think
Have I ever offered you
a word of advice?
Instead, you are the one who behave thus
in my interest.
Celebrating drunkenness
feeling heady all the way
to dance to kiss
to tease
to argue
to quarrel to make peace
to shed tears in love's sheer bliss _
I am able to do all these and more
You know too well, for sure.
Yet why do you behave in this manner...?
Maybe I can’t climb the mountain
But, can you for certain?
Still what pleasure do you gain
using this cunning strategy on me
ever again
I know very well
that you would consider yourself
the winner
in your endeavour
by forcing on me this misfortune of
penning this piece
and would wait for a chance
to write a verse on this.
Yet I ask thee
to stop all activities
that insist on
highlighting my ageing, you see.

நண்பர்களிடம் ஒரு விண்ணப்பம்

எனக்கு வயதாகிக்கொண்டிருப்பதை வலியுறுத்தும்
நடவடிக்கைகளைத் தயவுசெய்து நிறுத்துங்கள்
நண்பர்களே
உங்களை நண்பனாக பாவித்துத்தானே
எரிச்சலும் கோபமும் பொறாமையும்
காதலும் காமமும் கொள்கிறேன்
உங்களைப் போலத்தானே நானும்
பராதிகளையும் புகார்களையும் அடைகாத்து
உயிரூட்டி உலவவிடுகிறேன்.
சற்றே யோசித்துப் பாருங்கள்
என்றேனும் உங்களுக்கு
ஒரு அறிவுரையேனும் கூறியதுண்டா?
மாறாக, நீங்கள்தான் என்பொருட்டு
அப்படி நடந்துகொள்கிறீர்கள்.
குடியைக் கொண்டாடவும்
போதையில் குதூகலிக்கவும்
நடனமாடவும் முத்தமிடவும்
நையாண்டி செய்யவும்
தர்கிக்கவும்
சண்டையிடவும் சமாதானம் கொள்ளவும்
காதலின் பித்தத்தில் கண்ணீர் விடவும்
என்னால் முடிவதை நீங்கள் நன்றாக அறிவீர்கள்
எனினும் ஏனிப்படி நடந்துகொள்கிறீர்கள்.
ஒருவேளை என்னால் மலையேற முடியாமல்
இருக்கலாம்
ஆனால், உங்களால் முடியுமா என்பது சந்தேகம்தானே
இருப்பினும் இந்த தந்திர உத்தியை
என்மீது பிரயோகிப்பதில் அப்படியென்ன ஆனந்தம்
இதை எழுதும் துர்பாக்கியத்தை ஏற்படுத்தியதன் மூலம்
உங்கள் முயற்சியில் வெற்றி பெற்றுவிட்டதாக
நீங்கள் எக்களிப்பீர்கள் என்பதையும்
வாய்க்குமானால் இதுகுறித்து நீங்கள்
ஒரு கவிதை எழுதுவீர்கள் என்பதையும்
நானறிவேன்
ஆயினும் கேட்கிறேன்
எனக்கு வயதாகிக்கொண்டிருப்பதை வலியுறுத்தும்
நடவடிக்கைகளைத் தயவுசெய்து நிறுத்துங்கள்.

சி. மோகன்


No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE