A POEM BY
SAFNAS HASIM
for having lifted and held close the puppy.
Finding fault with its
rubbing its cloud-soft brown
against my legs
they pushed me into the bathroom.
When snatching my clothes
as the same skysoft foam-like puppies
I had lifted and stroked
some small some big.
When they licked me _
standing outside they asked me to
rub and clean my body
so thoroughly.
The eyes they wore when I lifted them
I apply them now upon my being.
and as the same mischievous tail
I became the sky-soft foam girl.
Fed my puppy brown.
In the white foam of my bath
sweet barks.
நாய்க்குட்டியை தூக்கியதற்காக
என்னை குளிக்கச் சொன்னார்கள்.
வானப்பஞ்சு பழுப்பில்
என் கால்களை உரசுவதாய்
என்னை குளியலறைக்குள்
தள்ளி விட்டார்கள்.
என் ஆடைகளை பிடுங்கிக்கொண்டதும்
வானப்பஞ்சு நுரையாய்
நான் தூக்கிய அதே குட்டிகளாய்
சிறியதும் பெரியதுமாக
என்னை நக்கியபோது
அவர்கள் வெளியிலிருந்து
என்னை நன்றாக
தேய்க்கச் சொன்னார்கள்.
நான் தூக்கியபோதிருந்த
அதே கண்களை
என் உடலில் அப்பிக் கொண்டேன்.
அதே குறும்புவாலாய்
நான் வானப்பஞ்சு
சிறுமியானேன்.
என் பழுப்பு நாய்க்கு முலையூட்டினேன்.
குளித்த வெண்நுரையில்
அழகான குரைத்தல்கள்.
சப்னாஸ் ஹாசிம்
Safnas Hasim
No comments:
Post a Comment