INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Sunday, November 8, 2020

NESAMITHRAN'S POEMS(2)

TWO POEMS BY

NESAMITHRAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

(1)


A handful of soil that cannot be thrown beyond earth

Having the sea stand erect someone is slicing it into planks of glasses.
Rain
Which meteor had broken earth’s thermometer
All over the lawn Mercurial droplets are flying
The massive cylinder called Sea is a whetstone
The sky hones
Dusk and Dawn
The ashes of words
turn into clouds burn and die out
and enter into the night.
Just as the sea the sand too ever unable to exit
keep moving on as footprints
Which wind is that which had xeroxed the same direction
on all sides
and stuck it everywhere
Which female’s craving has downloaded as shade
unable to be hauled by hand
the hue frozen into Emerald
Ho, who had converted the birds’ bellies as balloons
filled with smoke blown inside
Which hand is that which had spread the storm
as electric wire and drawn lifelines
Who has switched on the abject swirl of the ball
that had lured the meteor
Who has stirred the virus-skeleton of the
Demon of Time Immemorial
buried deep in the polar
As the shadow of the caged bird falling on speeding train
Life being ripped apart.


பூமிக்கு வெளியே எறிய முடியாத பிடிமண்

கடலை செங்குத்தாய் நிறுத்தி கண்ணாடிக் கண்ணாடியாய் யாரோ அறுத்துக் கொண்டிருக்கிறார்கள்
மழை
பூமியின் வெப்பமானியை எந்த எரிகல் உடைத்தது
புல்வெளியெங்கும் பாதரசத்துளிகள் பறந்து கொண்டிருக்கின்றன
கடலெனும் மாபெரும்
திகிரியோர் சாணைக்கல்
வானம் தீட்டுகிறது
அந்தியும் கருக்கலும்
வார்த்தைகளின் சாம்பல்
மேகங்களாகி எரிந்தணைந்து இரவுக்குள் நுழைகின்றன
கடலைப் போலவே மணலும் வெளியேறவே முடியாமல் பாதச்சுவடுகளால் நகர்ந்துகொண்டே இருக்கிறது
ஒரே திசையை எல்லா பக்கமும் நகலெடுத்து ஒட்டி வைத்த காற்று எது
மரகதமாய் உறைந்த நிறத்தை கையில் அள்ள முடியாத நிழலாய் ஒளி இறக்கம் செய்ததெந்த தனியளின் தாபம்
புகை கொண்டு ஊதி நிரப்பிய பலூன்களாய் பறவைகளின் அடிவயிற்றை மாற்றி பறக்கவிட்டதார்
சூறைக்காற்றை மின் கயிறாய்
விரித்து ரேகைகளிட்டதெந்த கரம்
விண்கல்லை ஈர்த்த விசைப்பந்தின் இகழத்தக்க சுழற்சியை முடுக்கியது யார்
துருவத்தில் புதைந்த பேரூழி
காலப் பிசாசின் கிருமிப் பிரேதத்தை
உசுப்பியவன் எவன்
ஓடும் ரயிலின் மேல் விழும்
கூண்டுப் பறவையின் நிழலாய்
அறுபடுகிறது இருப்பு.


(2) ZHA’GARI (ழகரி)

See the birds
They can eat with the same lip with which they fed
The migrant birds set out instantly
from one continent to another
for the sake of mating
Every time growing a new skin
snakes copulate.
In seahorses it is the male
that becomes pregnant.
We know of bird breathing its last
as soon as its companion dies
But, do we know of such plants?
Metamorphosing into bird
snake and more _
Oh, what is there to savour?
Why not we exchange our bodies?
Is there a better way to experience Love ?
Do tell me please.

நேச மித்ரன்

ழகரி - 6
பறவைகளைப் பார்
,ஊட்டிய உதட்டாலேயே
உண்ண முடிகிறது
நினைத்தால்
காதலிப்பதற்காய்
கண்டம் கடக்கின்றன
வலசைப் பறவைகள்
ஒவ்வொரு முறையும்
புதிய தோல் வளர்த்து
புணர்கின்றன நாகங்கள்
கடற்குதிரைகளில்
ஆண் தான் கர்ப்பம்
சுமக்கிறது
இணை மாண்டதும்
தானும் மாயும் பறவைகள்
தெரியும்
தாவரங்களைத் தெரியுமா
கூடுவிட்டு கூடு பாய்ந்து
பறவையாய் பாம்பாய்
இன்ன பிறவாய் ஆவதில்
என்ன ருசி
நாம் ஏன் நம்
உடல்களை
மாற்றிக் கொள்ளக் கூடாது
காதலை உணர இதைவிட
சிறந்த உபாயம் ஏதுமிருந்தால்
சொல்.

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024