INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Sunday, November 8, 2020

KALA PUVAN'S POEM

 A POEM BY

KALA PUVAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


Water is but the heart of Soil.
Root is the nerve.
Trees are the battalions.
Sea is Earth’s comrade.
Wind is Land’s breath.
Volcanoes , land’s fever
Valleys, Land’s pits
Mountains, the lumps.
The Moon faraway
is Land’s daughter dear
Stars
her best pals.
Clouds lovers of Earth
Those flying across the Milky Way
near and far
Sky’s populace.
Earth’s sweat-droplets.
Sun is the father of Land.
Without burning the Earth
He keeps providing the required warmth
and heat
From afar.
Every now and then
Mother Earth keeps wiping off
the sweat-drops _
which are our Deaths.

Kala Puvan

நீர் என்பது
நிலத்தின் உள்ளம்
வேர் என்பது
நிலத்தின் நரம்பு
மரங்களே நிலத்தின் படைகள்
கடல் என்பது
பூமியின் தோழன்
காற்று என்பது
நிலத்தின் மூச்சு
எரிமலைகள் நிலத்தின் காய்ச்சல்
பள்ளத்தாக்குகள் நிலத்தின் குழிகள்
மலைகள் நிலத்தின் புடைப்புகள்
தூரத்தில் இருக்கும் நிலா
நிலத்தின் மகள்
நட்சத்திரங்கள்
மகளின் தோழிகள்
மேகங்கள் பூமியின் காதலர்கள்
தொட்டும் தொடாமலும்
பட்டும் படாமலும்
வான் வீதியில் பறந்து செல்வன
பூமியின் மக்கள்
நிலத்தின் வியர்வைத்துளிகள்
சூரியனோ நிலத்தின் தந்தை
நிலத்தை சுட்டுவிடாமல் தேவையான வெப்பத்தை
தேவையான தூரத்திலிருந்து தந்து கொண்டேயிருக்கிறான்
வியர்வைத்துளிகளை அவ்வப்போது நிலமகள்
துடைத்து எறிகிறாள்
அவையே நம் மரணங்கள்
கலா புவன்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE