INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Sunday, November 8, 2020

THEEPIKA THEEPA'S POEMS(2)

 TWO POEMS BY

THEEPIKA THEEPA

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)]

1. BLEEDING PARDON
Bloodbaths and massacres
have become all too familiar to us*
Just as the leaking rainwater in the veranda
our eyes grew watching blood non-stop.
In the name of war
we had marketed blood so cheap
Blood had never been novel to us
Blood dripped in all our journals
All our days commenced with gory deaths.
In our nights
more than the stars
humans dropped dead.
In the name of war
we pardoned Blood.
Crimson-hued blood that went on springing
poured torrentially.
We were blood-sprouting foster-children
In the end
with no room for any peace whatsoever
War too had been massacred.
But we are yet to let go of
the bloody-cups.
The frenzy of our blood given so profusely
still make us dance to its tune.
Our blood keeps chasing us
not letting us go.
Despite the declaration that well before the harvest time
our armaments were silenced
bloodthirsty, we keep roaming all over the world
The curse called blood entrenched in us
is throttling us.
Here
with hammer we smash our own children
and kill them.
Alas, my god
Forgive us for being bloodthirsty.
Let someone secure freedom for our people
from the gruesome grip of blood.

*We : Eelam Tamils


இரத்த மன்னிப்பு
----------------------------
இரத்தங்களுக்கும்,
படு கொலைகளுக்கும்
பரீட்சயமானவர்கள் *நாங்கள்.
ஒழுகும் தாழ்வார மழைநீரைப் போல
குருதியைப் பார்த்துப் பார்த்து
வளர்ந்தன எங்கள் கண்கள்.
யுத்தத்தின் பெயரால்
இரத்தத்தை நாங்கள்
மிக மலிவாகச் சந்தைப்படுத்தினோம்.
இரத்தமென்பது
எங்களுக்கு எந்தப் புதினமாகவும் இருக்கவில்லை.
எங்களின் பத்திரிகைகளெல்லாம்
இரத்தங்களோடேயே வடிந்தன.
எங்களின் நாட்களெல்லாம்
படு கொலைகளோடேயே தொடங்கின.
எங்களின் இரவுகளில்
நட்சத்திரங்கள் உதிர்ந்ததைக் காட்டிலும்
மனிதர்கள் உதிர்ந்தார்கள்.
நாங்கள்
யுத்தத்தின் பெயரால்
இரத்தத்துக்கு பாவமன்னிப்பு வழங்கினோம்.
அள்ள அள்ளக் குறையாத
சிவப்பு இரத்தம் ஊறிப் பொழிந்தது.
நாங்கள் இரத்தம் பூக்கும்
தத்துப் பிள்ளைகளாக இருந்தோம்.
இறுதியில்
இனியொரு சமாதானத்துக்கு இடமின்றி
யுத்தமும் படு கொலை செய்யப்பட்டு விட்டது.
நாங்கள்
எங்களின் இரத்தக் கிண்ணங்களை
இன்னமும் கைவிடவேயில்லை.
அள்ளியள்ளிக் கொடுத்த
நம் இரத்தத்தின் வெறி
எங்களை ஆட்டுவிக்கிறது.
இன்னமும் கைவிடாமல்
நம்மைத் துரத்திக் கொண்டு வருகிறது
எமது இரத்தம்.
அறுவடைக் காலத்துக்கு முன்பே
நம் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டுவிட்டன
என்று பிரகடனப்படுத்தப்பட்டு விட்ட பிறகும்
நாங்கள் குருதியின் தாகத்துடன்
உலகெங்கும் அலைகிறோம்.
எங்களைப் பிடித்துக் கொண்ட
இரத்தச் சனியன்
கழுத்தை இறுக்கி வைத்திருக்கிறது.
இதோ!
நாங்கள் சுத்தியலால்
எங்கள் சொந்தக் குழந்தைகளேயே
அடித்துக் கொல்கிறோம்.
கடவுளே!
எங்களுக்கு இரத்த மன்னிப்பளியும்.
எங்களின் சனங்களுக்கு
இரத்தத்தின் பிடியிலிருந்து
யாராவது விடுதலை பெற்றுக் கொடுங்கள்.
--- xxx ---
- தீபிகா-
04.10.2020
02.01 அதிகாலை
* நாங்கள் - ( ஈழத் தமிழர்)


2. MOTHER’S RAINY SEASON
Overriding all the poems that this rain
brings to me
pains
the wheezing sound of mother’s Asthmatic bronchitis
Children who have seen at close quarters
the rainy season of their mother
suffering to the core unable to mutter a word
would never ever celebrate rain.
With no oven lit
in mother’s wheezing house
just the warm tea given by father
the children have,
soaking the bread-pieces in it.
Children not wanting to sail ships
keep pleading with the Rain
for the sake of their mother
lying all wrapped.

Theepika Theepa

அம்மாவின் மழைக்காலம்
---------------------------------------
இந்த மழை
என்னிடம் கொண்டு வந்து சேர்க்கும்
எல்லாக் கவிதைகளையும்
தோற்கடித்துக் கொண்டு வலிக்கிறது
அம்மாவின்
முட்டு இழுப்புச் சத்தம்.
ஒரு வார்த்தை பேச முடியாமல்
அவதிப்படுகிற
அம்மாவின் மழைக் காலங்களை
அருகிருந்து பார்த்து வளர்ந்த குழந்தைகள்
ஒரு போதும்
மழையை கொண்டாடப் போவதேயில்லை.
அடுப்பெரியாத
அம்மாவின் மூச்சிழுக்கும் வீட்டில்
அப்பா ஆற்றிக் கொடுக்கும்
வெறும் தேனீரை
குழந்தைகள் பாண் துண்டுகளில்
தோய்த்துச் சாப்பிடுகிறார்கள்.
கப்பல் விட விரும்பாத தம் கைகளால்
குழந்தைகள்
போர்த்துக் கொண்டு படுத்திருக்கிற
தங்கள் அம்மாவுக்காக
மழையிடம் மன்றாடிக் கொண்டேயிருக்கின்றன.

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE