INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Friday, November 6, 2020

JEYADEVAN'S POEM

 A POEM BY

JEYADEVAN


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


I had a house
I was not in it.
I had a plot
There was no house in it
But, I am in some house indeed.
All windows are not alike
Yet for the wind the windows bear no difference,
do they?
In the house inhabited by many dwell many
Die many
Yet there sleeps in the cradle
A new birth.
In the walls of one and all houses
There echoes the cough of an old man or woman.
At the threshold of all houses
The smell of some woman’s tears
At times the fragrance of jasmine too.
There a ghost in a house
While sleeping in a room, the stench of blood.
Learning upon enquiry that a mason fell down and died
I shifted from there.
The owner of this house breathed his last,
After I moved in, Alas…
I on the verge of death lives in another house now.
Who at all owns the houses
Just the way our body is not ours….
Does the sparrow live in the same nest?
In the teak chair of your great grand father
Now a copper trader sits and enjoys a drink
Where has the dwelling of your ancestor gone?
You on the look out for a tenement in the city
Will be going to the eternal abode for sure
Then, where is the need for a dwelling? Oh hear….
Relatives, not beyond the house, sang the Poet.
House is but the place where you have kith and kin –
Am I right?
If not, it is jungle –
woeful wilderland.
A droplet of rain dissolving in rain
We are
Then why do we wish to buy
the very sky
And, the sky would also be vanished
one day.
Hey, once we die,
there will be no sky, my sonny.

ஜெயதேவன்
எனக்கொரு வீடு இருந்தது
அதில் நான் இல்லை.
எனக்கு ஒரு மனை இருந்தது
அதில் வீடு இல்லை
ஆனாலும் நான் ஏதோ வீட்டில்தான் இருக்கிறேன
எல்லா ஜன்னல்களும் ஒன்று போலில்லை
ஆனாலும் காற்றுக்கு ஜன்னல்கள்
ஒரே மாதிரிதானே.
பலபேர் இருந்த வீட்டில் பலரின் மனிதவாசம்
பலரின் மரணவாசம்
ஆனாலும் தொட்டிலில் உறங்குகிறது
புதிய ஜனனம்.
எல்லா வீட்டுச் சுவரில் ஒரு கிழவன்
அல்லது கிழவி இருமல் எதிரொலிக்கிறது
எல்லா வீட்டு நிலைப்படியிலும்
எவளோ ஒரு பெண்ணின்
கண்ணீர் மணம்
மல்லிகை மணமும் சமயத்தி
ஒரு வீட்டில் பேய் இருந்தது
ஓர் அறையில் உறங்கும் போது
ரத்த வாடை
விசாரித்த வரை கொத்தன்
ஒருவனை சாளரம் சரித்த கதை
அறிந்து வீடு மாறினேன்
வந்த வீடு கட்டியவனே செத்தான்
நான் வந்த பின்...
சாகப்போகும் நான் இப்போது
வேறு வீட்டில் வாழ்கிறேன்.
வீடுகள் எவருக்குத்தான் சொந்தம்
உட்ற்கூடு சொந்தமாகா மாதிரி..
ஒரே கூட்டிலா வாழ்கிறது குருவி?
உன் முப்பாட்டனின் தேக்கிழைத்த
நாற்காலியில்
இப்போது ஏதோ ஒரு செப்பு வணிகன்
அமர்ந்து மது அருந்துகிறான்
முப்பாட்டன் வாசம் எங்கே போனது?
நகரத்தில் வீடு தேடும் நீ
வீட்டுக்குத்தானே போகப் போகிறாய்
பின் ஏன் ஒரு வீடு?
வீடு வரை உறவு என்றான் அவன்
உறவிருக்கும் இடம்தானே வீடு
இல்லாயின் அது காடு....கடுங்காடு.
காலத்தில் கரையும் மழைத்துளி
நாம்.
ஏன் வானத்தையே வாங்க நினைக்கிறோம்
வானமும் ஒரு நாள் காணாமல்தானே போகும்
கண் மூடினால் வானம் இல்லை...மகனே

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024