INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Friday, November 6, 2020

HAMEED U.NIZAR'S POEM

 A POEM BY

HAMEED U.NIZAR


Translated Into English by Latha Ramakrishnan(*First Draft)


TRESPASS

The blinding dark of a dense forest…
its quietude….. trepidations ….
_ Only he who enters into it is able to
can experience it all
That all too dense forest
At times in slumber
At some other times
turns wide awake.
In the midst of these pluses and minuses
the species inhabiting that space
their gait and leap
their glance and song
and their dancing in gay abandon
narrate tales myriad.
Man, merciless to the core
gaining entry into those forests
not only pulls and plucks the fruits therein
ripe and unripe
and the shade and splendour
and make it all his possession
but also bring with him
the tales jungle shares
and engraving them and nurturing them
make them his own
to his heart’s content
claiming right over them
for all his descendents.
++++ அத்துமீறல் ++++
அடர்ந்த கானகமொன்றின்
அந்தகாரத்தை ... அமைதியை ...
அச்சுறுத்தல்களை
அதனுள் நுழைபவனாலேயே
நுகர முடிகிறது
அந்த ... அடர்ந்த கானகம்
சில சமயங்களில் உறங்குகிறது
இன்னும் ...சில சமயங்களில்
விழித்துக்கொள்கிறது
இச்சாததக பாதகங்களுக்கு மத்தியில்
அங்கு வாழ் உயிரினங்களின்
நடக்கும் நடையும்
பாயும் பாய்ச்சலும்
பார்க்கும் பார்வையும்
ஓடும் ஓட்டமும்
பாடும் கீதமும்
ஆடும் ஆட்டமும்
சொல்கின்றன பல கதைகளை
ஈவிரக்கம் இல்லாத மனிதன்
அந்தக் கானகங்களுக்குள் நுழைந்து
அங்கிருக்கும்
காய்களையும் கனிகளையும்
அதன் நிழலையும் எழிலையும்
இழுத்துப் பறித்து
தனதாக்கிக் கொள்வது போல்
கானகம் சொல்லும் கதைகளையும்
எடுத்து வந்து
பதித்துப் பாதுகாத்து
தனதாக்கி மகிழ்கிறான்
சந்ததிகளுக்கும் உரிமை கொண்டாடி
உ . நிசார்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE