TWO POEMS BY
MULLAI AMUTHAN
would offer meanings aplenty
Anger would trigger anger
would turn us sad,
allow expectation to sprout.
There are many more…
The silence of father
The silence of the neighbor
The silence of the politician
The silence of the militant
The silence of the co-worker
The silence of the master
providing employment
The silence of the poems
The silence of the publishing houses
The silence of the readers…….
Above all
The silence of the better half
who gives off her jewelry all too often
for pledging…
The silence of the Lord
standing lifeless in the heaven above
What more to tell….?
சிலரின் மௌனம்
பல அர்த்தங்களைத் தந்து செல்லும்.
பலரது மௌனம்
கோபம் கோபத்தைக் கிளறும்.
ஆதங்கப்படுத்தும்..
எதிர்பார்ப்பைக் கொடுக்கும்...
இன்னும்..
அப்பாவின் மௌனம்..
அயல் வீட்டாரின் மௌனம்.
அரசியல்வாதியின் மௌனம்..
போராளியின் மௌனம்..
சக தொழிலாளியின்
மௌனம்..
தொழில் தரும் முதலாளியின் மௌனம்
கவிதைகளின் மௌனம்
பதிப்பகங்களின் மௌனம்...
வாசகர்களின் மௌனம்...
இத்தனைக்கும் மேலாக
அவ்வப்போது
அடகு வைக்க தன் நகைகளை
கழற்றித்தரும்
மனைவியின் மௌனம்...
பரலோகத்தில் பிணமாய் நிற்கும்
பிதாவின் மௌனம்..
இன்னும் எதைச் சொல்ல...?
முல்லை அமுதன்
(2)
You went away saying that
you would revisit today.
Umpteen number of times I have been
ignored by you.
Wonder why but your anger was felt by me
all the intensely.
My silence might have caused irritation
Never mind, My Friend
This space is now
all yours.
Everything is under your control…
Enjoy life to the hilt!
Just let me be myself.
I know of gun’s heart.
Killing me
don’t you kill my ‘yet to be written’ poems too.
Mullai Amuthan
•
என்னை
எச்சரிக்கிறாய்.
இன்றும்
வருவதாகச் சொல்லிச்
சென்றாய்.
பல தடவை
உன்னால்
புறக்கணிக்கப்படிருக்கிறேன்.
ஏனோ
உன்
கோபம் அதிகமாகவே
என்னால்
உணரப்பட்டது.
என் மௌனம்
கூட எரிச்சலை
தந்திருக்கலாம்.
பரவாயில்லை
நண்பனே..
-இந்த வெளி
இப்போது
உனக்கானது...
எல்லாமே-
உன் கட்டுப்பாட்டிற்குள்..
வாழ்ந்துவிட்டுப் போ!
நானாக இருக்கமட்டும்
அனுமதித்துவிடு..
துப்பாக்கியின்
மனது பற்றி நானறிவேன்.
என்னைக் கொன்று
எழுதாத
என் கவிதைகளையும்
கொன்றுவிடாதே.
முல்லை
No comments:
Post a Comment