A POEM BY
ABDUL SATHAR
Hei you, who lies buried deep in my heart
as centuries old cave art…..
When memories writhe as snakes
O how many a night I have lost….
In the leaves that flutter at night
in wind’s embrace
in the flowers of buds unfolding in the night
I feel the strumming of music
that your feather-touch had offered.
The jasmine petals of your tresses
fallen in my lap
never fades nor withers
but keep blooming so fragrantly
In my inner woodland.
The moisture of the final kiss at our parting
is still inside me
as the pearl of oyster deep down the sea.
providing succour and solace.
Silken silence that was your language of
those hours
when we happily conversed
has come to be my language these days…
As the hues and shades of rainbow
As the aroma of earth when it rains
As butterfly’s fluttering
those days
so filling; wholesome….
Today
in abject white emptiness
and gloomy black densely dark
days move on as snail…
In the ‘too long a wait’ stretching beyond epochs
At nights when moon go into hiding
is it thee
glistening as the lone star far away
up above…..?
Is it your face my love…?
Abdul Sathar
•
நூற்றாண்டு கால
குகை ஓவியமாய்
என் இதயத்தில்
புதைந்து கிடப்பவளே...
நினைவுகள் சர்ப்பமாய்
நெளியும்போது
எத்தனை இரவுகளை
இழந்திருக்கின்றேன்...
காற்றின் தழுவலில்
இருட்டில் சலசலக்கும்
இலைகளுக்குள்ளும்
இரவில் மொட்டவிழும்
மலர்களுக்குள்ளும்
உன் மென்தொடுதல் தந்த
இசை மீட்டலை
நாளும் உணர்கிறேன்...
என் மடியில் உதிர்ந்த
உன் கூந்தல் மல்லிகைகள்
வாடாது வதங்காது
என் இதயவனத்தில் இன்னும்
மணம் வீசிக்கொண்டிருக்கின்றன...
நம் இறுதிப்பிரிவின்
முத்தத்தின் ஈரம்
ஆழ்கடல் சிப்பியின் முத்தாய்
என்னுள் பதமாய் இருக்கின்றது...
நாம் உரையாடிய பொழுதுகளின்
உன் மொழியான சுகமான மெளனமே
இன்று என் சோக மெளன
மொழியாகிப்போனது...
வானவில்லின்
வர்ணங்களாய்...
மழைப்பொழிந்த
மண்வாசனையாய்...
வண்ணத்துப்பூச்சியின்
சிறகடிப்பாய்...
நிறைந்திருந்தன
அந்நாட்கள் ...!
இன்று
வெண்வெறுமையிலும்
இருளடர்ந்த கருமையிலும்
நாட்கள் நத்தையாய்
நகர்கின்றன...!
யுகங்கள் கடந்த
காத்திருப்பில்
நிலவு ஒளிந்து கொள்ளும்
இரவுகளில்
தூரத்து வானில்
ஒற்றை விண்மீனாய்
ஒளிர்வது நீதானா..?
அது உந்தன் பூமுகம்தானா...?
- அப்துல் சத்தார்
No comments:
Post a Comment