A POEM BY
SHANMUGAM SUBRAMANIAM
be brought to a halt
then the habit of moving straight can start
Nothing central
nor far-flung
In places close by enough we have
But it is the thought that
what we need is somewhere else
makes us languish thus.
A thing that has eluded the scene
that entraps you instantly
would become the scene of the second glance.
Something or other appearing in succession
swarming all over you
as the cat grown in our lane
that with its cushion-walk
leaps to the adjacent wall
with no rehearsal at all
While proceeding on our own unhurriedly
with the natural ease of nonchalance
the mature wisdom of redeeming oneself
would be formed and enhanced.
Shanmugam Subramaniam
சுற்றிவருவதை எப்படியாகிலும் நிறுத்திட்டால்
நேராகச் செல்லும் பழக்கத்தை துவங்கிவிடலாம்
நடுவிலும் ஏதுவுமில்லை தொலைதூரத்திலும் ஒன்றுமில்லை
அக்கம் பக்கத்தில் போதுமானவை இருக்கின்றன
ஆனால் தேவையானது வேறெங்கோ உள்ளதாக
நினைப்பதின் விளைவுதான்
இவ்வாறு உழல்வது
பார்த்த நொடியில் ஈர்க்கும் காட்சியில் தப்பிய
ஒன்று
இரண்டாம் பார்வையின் காட்சியாகும்
அடுத்தடுத்து ஏதேனும் தோன்றி
மொய்த்துக் கொண்டே இருக்க
ஒருவீட்டுச் சுவரில் மெத்தன நடந்து
அடுத்தவிட்டுச் சுவருக்குத் தயாரிப்பின்றித் தாவும்
என் தெருவில் வளர்ந்த பூனையைப் போலும்
வேகமின்றி மெதுவாக தன்போக்கில்
சிரத்தையின்றித் தவிர்த்துச் செல்லும் போது
அமைந்துவிடும் தன்னை மீட்கும் பக்குவம
-எஸ். சண்முகம் -
No comments:
Post a Comment