INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Friday, November 6, 2020

MAANA BASKARAN'S POEMS(2)

TWO POEMS BY

MAANA BASKARAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)



(1)


Taking with me a lie hitherto unused
I climbed down the stars
Knowing that it is going to be used today
The lie dressed up and adorned itself.
'For finding out whether the bubbling joy within
gets reflected in the face
nice it would be to have a mirror'
thought the lie.
Knowing that I melt and lose myself in a line
that comes in the song
‘Kanne Kalaimaane’
it murmured ‘Aezhai endraal adhilor amaidhi’.
The query cat that
am I to use that lie
which I had shied away
despite umpteen number of
occasions for using it,
came to stand on the wall of my heart.
“Please don’t use me with people
known to thee’ _
So the lie suddenly appealed to me.
When I looked at lie’s face then
It was all Real!
-- மானா பாஸ்கரன் (maana baskaran)
----------------------------
இதுவரை பயன்படுத்தாத
ஒரு பொய்யை எடுத்துக்கொண்டு படியிறங்கினேன்.
இன்று நாம் பயன்படுத்தப்படப் போகிறோம்
என்பதறிந்த பொய்
சீவி சிங்காரித்துக்கொண்டது.
உள்ளுக்குள் புரளும் மகிழ்ச்சியின் ரேகைகள்
முகத்தில் தெரிகிறதாவென்று பார்த்துக்கொள்ள
முகம் பார்க்கும் கண்ணாடி
கிடைத்தால் நன்றாக இருக்குமென்று
நினைத்தது பொய்.
’கண்ணே கலைமானே’
பாடலின் இடையில் வரும் ஒரு வரியில்
நான் அதிகம் லயிப்பேன் என்பதறிந்து
’ஏழை என்றால் அதிலோர் அமைதி’ என
முணுமுணுத்தது.
எத்தனையோ முறை வாய்ப்பு வந்தபோதும்
பயன்படுத்தாத அந்தப் பொய்யை
இப்போது பயன்படுத்தத்தான் வேண்டுமா
என்கிற கேள்விப்பூனை வேறு
மனதின் மதில் மேல் நின்றது.
உன்னைதெரிந்தவர்களிடம்’
என்னை பயன்படுத்தாதே என்று
திடீரென்று அந்தப் பொய்
என்னிடம் ஒரு வேண்டுகோள் வைத்தது
அப்போது
அந்தப் பொய்யின்
முகத்தைப் பார்த்தேன்
அது உண்மையாய் இருந்தது!


(2)
Only on the basis of lines drawn by thee
I can determine
the length of your hands.
At the instant when you suddenly stop the line
being drawn by you
Your lines become the hands of that flower-vendor
reducing the length of a measurement
by one quarter,
claiming it to be the full.
When you pick up the pin
that lie with all the possibility of
pricking someone’s feet
your lines draw your hands
real long!

நீ இழுக்கும் கோடுகளை வைத்துதான்
என்னால் முடிவு செய்ய இயலும
உன் கைகளின் நீளத்தை.
சட்டென்று நீ இழுக்கும் கோட்டை
நிறுத்தும் தருணத்தில்
முக்கால் முழத்தை நறுக்கி
ஒரு முழமென்று சொல்லித் தரும்
பூக்காரம்மாவின் கைகளாகிவிடுகின்ற
உன் கோடுகள்.
யாருடைய கால்களிலாவது
குத்திவிடப் போகிறதென்ற
குண்டூசியை நீ எடுக்கும்போத
உன் கைகளை
நீளமாக வரைந்து விடுகின்ற
உன்னுடைய கோடுகள்.
- மானா பாஸ்கரன் (maana baskaran)

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024