TWO POEMS BY
ABDUL JAMEEL
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
Visiting the open courtyard of my house
ever so often
fly wandering rapturously
eye-filling magnificent butterflies
When they arrive thus
mostly they don’t come empty-handed.
Carrying all the way
the fragrance of wild flowers
hitherto beyond human nostrils
and sprinkling them all over the house
they return.
In those minuscule moments
blossoms within me
A Massive Grand Floral Forest.
பட்டாம்பூச்சிகள் உதிர்க்கும் வாசனை
_____________________________
என் வீட்டு முன்றலுக்கு
இடைக்கிடை
அழையா விருந்தாளியென வந்து
அலாதியாக பறந்து திரிகின்றன
கண்களை கவரும் பட்டாம் பூச்சிகள்
அவ்வாறு பிரசன்னமாகும் போது
அனேகமாக சும்மா வருவதில்லை
இதுவரை யாராலும் நுகர முடியா
காட்டுப் பூக்களின் வாசனையை
சுமந்து வந்து வீடெங்கும்
உதிர்த்தி விட்டுதான் திரும்பிச் செல்கின்றன
அச் சிறு கணங்களினிடை
எனக்குள் முகிழ்கிறது மாபெரும் பூக்காடு.
ஜமீல்
(2) LAUGHTER OF CHILDREN READING DARKNESS
When they kiss me on the forehead
through the ecstasy unparalleled
when I feel the non-stop kisses
with their tender palmyrafruit pressing softly
A cluster of fireflies
flutter winking,
reading my heart’s dark.
The laughter of fireflies resembles
the 'never to taste sour' grape juice _
no matter how much you drink
As radiance swells and overflows
in that laughter
in houses were children dwell
Darkness can’t prevail..
2. இருளை வாசிக்கும் குழந்தைகளின் சிரிப்பு
__________________
கள்ளங் கபடமற்ற
செல்லக் குழந்தைகளின்
வெல்லச் சிரிப்பினில்
நிதம் கரைந்து போகிறேன்
அவர்களென் நுதல் பொட்டிலிடு்ம்
நுங்கிதழ் பதிந்த
இடையுறா முத்தங்களை உணரும்
எல்லையற்ற பரவசத்தின் கணங்களிடை
ஒரு தொகை மின்மினிகள்
என் மனசின் இருளை வாசித்தபடி
கண்சிமிண்டிப் பறக்கின்றன
அருந்தருந்த தெவிட்டாமலிருக்கும்
திராட்சைப் பழச்சாற்றின்
தீராச் சுவையினை ஒத்தது
மின்மினிகளின் இதழ் சிந்தும் சிரிப்பு
அச்சிரிப்பினில் ஔி நிரம்பி
பீரிட்டு வழிவதனால்
குழந்கைள் வசிக்கும் வீடுகளில்
இருளிருக்க சாத்தியமில்லை
ஜமீல்
No comments:
Post a Comment