INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Sunday, April 19, 2020

RAGAVAPRIYAN THEJESWI's POEM

A POEM BY 
RAGAVAPRIYAN THEJESWI
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
CYCLING DOWNHILL
It is amidst friends
and my friendship with hours
that I stay alive for ever
On a drizzling evening
along the spiral mountain path
my bicycle would accelerate
at the speed of those climbing down
At that time my friend would come
climbing up
sans cycle, stamping on hardships
In his warm breath
I would turn a little parched. Then
defying gravitation my cycle would halt for a second
Instantly his smile
would erect the arch of friendship as a rainbow.
The cloud that has come, leaving behind
the salt in the sea itself, absent-mindedly
would suck the sweat of his attire.
All over his dress, salt-spots.
When the mystery of wheels that gain speed
while going down
slipping while climbing up resolves then,
my body would quiver.
When the cycle thrown off would fall
deep down into the abyss
a voice would resonate aloud
that mere legs would suffice for climbing up.

Ragavapriyan Thejeswi

மலையிறங்கும் மிதிவண்டிப் பயணம்...
எப்போதும்
நட்புகளுடனான பொழுதுகளிலும்
பொழுதுகளுடனான நட்பிலும்
நான் உயிர்த்திருக்கிறேன்..
ஒரு மழைச்சாரல் மாலையில்
வளைந்த மலைப்பாதையில்
என் மிதிவண்டி வேகமெடுக்கும்
இறங்குபவர்களின் வேகத்தில்..
அப்போது மேலேறி வருவான் நண்பன்
மிதிவண்டியின்றி சிரமங்களை மிதித்தபடி..
அவன் மூச்சுக்காற்று வெப்பத்தில்
கொஞ்சம் காய்ந்துபோவேன்..அப்போது
புவியீர்ப்புவிசையெதிர்த்து நிற்குமென்
மிதிவண்டி ஒரு நொடி..
அந்தப் போதின் அவன் புன்னகை
தோழமை வளைவு கட்டும் ஒரு வானவில்லென
உப்பைக் கடலில் மறந்து வைத்துவிட்டுவந்த மேகம்
அவன் உடலின் வியர்வையை உறிஞ்சிக்கொள்ளும்..
அவன் ஆடையெங்கும் உப்பின் அடையாளங்கள்..

இறங்கும் போதில் வேகம் காட்டும் சக்கரங்கள்
மேலேறுகையில் சறுக்கும் புதிர் அறியும்
அப்போதில் சிலிர்க்குமென் உடல்..
வீசியெறிந்த மிதிவண்டி பள்ளத்தாக்கின் ஆழத்தில்
விழும் போதில் உரத்து ஒலிக்குமொருகுரல்
மேலேற வெறும் கால்களே போதுமென்று..
ராகவபிரியன்

1 comment:

  1. இந்த ஊரடங்கு பொழுதில் மலையேற்றம் போக முடியாத ஆவலை அதிகப்படுத்தும் வரிகள். அழகான கவிதை.

    ReplyDelete

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024