INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Sunday, April 19, 2020

YAVANIKA SRIRAM's POEMS

THREE POEMS  BY 
YAVANIKA SRIRAM

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

(1)
My poem is that which, escaping music maestros or painting canvases that fail to complete a circle and also the sacred worships for the sculptures that have become eternal in History, fills food-grains
in the earthen bowl of the potter.

Further, in the cradle of civilization it has chosen dirge and lullaby as Classicism



In the place of the modernity of the Metallic Age it recommends the Stone Ages.



Or copulating with the primordial mother
as her lover youngest son gifting her the lust of youth as virginity.



As none can bemoan the long historical truths
better than the murmur of a pebble
I have abandoned my poem leaving it to flee in disguise
along the highway.

Yavanika Sriram
January 22 •
என் கவிதை இசை மேதாவிகள் அல்லது ஒரு வட்டத்தை நிரப்ப முடியாதஓவியக் கித்தான்கள் மற்றும் வரலாறில் நிலைத்த சிற்பங்களுக்கான புனித வழிபாடுகளில் தப்பி குயவனின் அன்றாட மண்சட்டியில் தானியங்களை நிறைப்பது
மேலும் அது நாகாரீகத்தின்தொட்டிலில் ஒப்பாரியையும் தாலாட்டையும்செவ்வியலாகக் கொண்டதோடல்லாமல்
உலோக காலங்களின் புதுமைக்கு பதிலாக கற்காலங்களை பரிந்துரைப்பது
அல்லதுபழந்தாயை புணர்ந்து
அவளின் காதலனாக கடை மகனாக அவளுக்கு இளமையின் வேட்கையை கன்னிமையாகப் பரிசளிப்பது
ஒரு கூழாங்கல் முணுமுணுப்பதை
விடவும் நெடிய வரலாற்று உண்மைகளை ஒருவரும் நதிக்கரையில் புலம்ப முடியாது என்பதால்
என்கவிதையை நெடுஞ்சாலையில் வேஷமிட்டு ஓடுமாறு கைவிட்டிருக்கிறேன்.

(2)

He from the era of Marx
and the other from the era of God
are conversing.
Nakulan who perceives Time as Place
fills the bottle of Brandy in the ounce glass.
No puritans in front
Beware, this is the third round
The art of taking leave of everything
always domestic man’s tavern - Aesthetics
God offers good pay
Better to verify your name in the government list.
Kafka’s stories about rats
Am not able to debate in the storeroom of our home.
The way lust turning agricultural fields slaughter houses and further,
a woman into Godliness
O it was then when I began about the practicality of returning home
Musing, ‘money no more’ they rose.
Men all over the world return home.
God has orphaned the night of those women
unable to return home. They wander along the marketplace.
God has always deemed separating girls from their parents,
his bounden duty.
Tombs of twosome a rarity.
From singing the world turning operational for love’s sake
or the world soothed with the soft feel of milky-boobs _
let the saints refrain
Oh, damn –
Sea’s roar for females
The surveillance of the dogs
Department-wise water land and the toil
beyond
They keep conversing.
Marx is buried along with God.
They who came from the era of god
Unable to turn product into Art
Try converting Art into God.
Inside the tomb he who had accepted Death
as a natural consequence of life
sleeps.
See there, the resurrection of God.
For his sake dance, turn delirious, howl.
At the altar of sacrifice
accept your death as something sacrosanct.

Note: Nakulan is a well known name in Tamil Little magazine Circle. Working as an English professor in Trivandrum Govt. Arts College, not getting married, lived his life as a bachelor, writing poems, short stories, novels. He had a younger sister by name Thirisadai. She too had written poems.
Nakulan used to sit in his ‘rattan’ chair and with his cat sitting at his feet would be contemplating on Space and Seasons.
The pseudonym Nakulan is a character in Hindu mythology.
Had lost his twin-brother Sakadevan.
His poem-collections ‘MOONDRU MATRUM AINDHAAVATHU KAVITHAIGAL(THE THIRD AND FIFTH POEMS) and COAT-STAND KAVIDHAIGAL (COAT-STAND POEMS) have been widely acclaimed.
He would turn insane the one sitting in front
and go to sleep
A servant-maid might’ve been there in his house. Those days , i.e., around 1974 his monthly salary would be fifteen thousand.
Based on that his creations are not to be valued any the less.
In all the twenty centuries such a poet’s presence a rare occurrence.
The new poets of Tamil should wait for another fifteen centuries to excel him, said Konangi once.
Marx would never have a dialogue with Nakulan.
He can’t enquire Marx “What is your name?” repeatedly.
He would ask Konangi only.
Yavanika Sriram
March 19 at 12:29 AM •
மார்க்ஸின்காலத்தில் இருந்துவந்தவனும்
கடவுளின் காலத்தில் இருந்து வருபவனும்
பேசிக் கொண்டிருக்கிறார்கள்
காலத்தை இடமாக அனுமானிக்கும் நகுலன்
பிராந்திப் புட்டியை அவுன்ஸ் குப்பியில் நிறைக்கிறார்
நற்பண்பு மிக்கவர்களே எதிரில் யாருமில்லை
கவனம் இது மூன்றாவது பெக்
ஜாக்கிரதையாக அனைத்திலும் விடைபெறும் லாகவம்
எப்போதும் குடும்பஸ்தர்களின் மதுவிடுதி அழகியல்
நல்லசம்பளம் வழங்குகிறார் கடவுள்
உங்கள் பெயரை அரசு பட்டியலில் சரிபார்த்து
கொள்வது உசிதம்
எலிகளைப்பற்றிய காப்ஃகாவின் கதைகளை
என் வீட்டு ஸ்டோர் அறையில் தர்க்கமாக்க முடியவில்லை
காமம் வயற்காடுகளை இறைச்சிக் கூடங்களை மேலும் ஒரு பெண்ணை இறைமையாக்குவதில்
ஓ அப்போதுதான் நான் வீடு திரும்புவதின்
யதார்த்தம் பற்றி
இனிப் பணமில்லை என அவர்கள் எழுந்து கொண்டார்கள்
உலகில் எல்லா ஆண்களும் வீடு திரும்பி விடுகிறார்கள்
வீடு திரும்ப முடியாத பெண்களின் இரவை
அனாதையாக்கினார் கடவுள் அவர்கள் சந்தையில் அலைகிறார்கள்
கடவுள் எப்போதும் பெண்களை அவர்களின் பெற்றோரிடமிருந்து பிரிப்பதைக் கடமையாகக் கொண்டார்
ஜோடிக் கல்லறைகள் அரிதானவை
மீண்டும் காதலின் நிமித்தம் தொழிற்படும் உலகை அல்லது பால்முலைகளால் ஒற்றி இதப்படும் உலகை துறவிகள் பாடாதொழியட்டும்
பெண்களுக்கு கடல் இரைச்சலையையும்
நாய்களின் காவலையையும்
துறைதோறும் நீர் நிலம் சார் அப்பாலை
உழைப்பையும்
அவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்
மார்க்ஸ் கடவுளோடு ஒருசேர புதைக்கப்பட்டுவிட்டார்
கடவுளின் காலத்தில் இருந்து வந்தவர்கள்
பொருளை கலையாக்க முடியாமல்
கலையைக் கடவுளாக்க முயல்கிறார்கள்
கல்லறையில் மரணத்தை மனித யதார்த்தமாக ஏற்றுக்கொண்டவன் உறங்குகிறான்
பாருங்கள் கடவுள் மீண்டும் உயிர்த்தெழுவதை
அவன் பொருட்டு ஆடுங்கள் வெறி கொள்ளுங்கள் ஊளையிடுங்கள்
உங்கள்மரணத்தைப் புனிதமாக பலிபீடத்தில் ஏற்றுக்கொள்ளுங்கள்

குறிப்பு:
திருவனந்தபுரம் அரசுக் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியாராக பணி செய்து திருமணம் ஏதும் செய்துகொள்ளாமல் பிரமச்சரியமாக வாழ்ந்து தமிழில் நாவல் கவிதை என எழுதி சிறுபத்தரிக்கை உலகில் அறியப்பட்டவர் நகுலன் அவருக்கு திரிசடை என்று ஒரு தங்கை உண்டு அவரும் கவிஞர்தான்
சூரல் நாற்காலியில் அமர்ந்து பூனைகாலடியில் இருக்க வெளியை பருவகாலங்களை தியானித்தவர்
நகுலன் என்ற புனைப்பெயர் இந்திய இதிகாசப் புனைவில் ஒரு காரக்டர்
சகாதேவன் என்ற தன் இரட்டையரைத்தொலைத்தவர்
இவரது மூன்று மற்றும் ஐந்தாவது கவிதைகள் மேலும்கோட்ஸ்டேண்ட்விதைகள்
பிரசித்திமானவை
எதிரே அமர்பவரை கிறுக்கனாக்கித் துரத்தி விட்டுப் படுக்கப் போவார் வீட்டில் ஒரு வேலைக்காரி இருந்திருக்கக் கூடும் அன்றையநாளில் அவரது வருமானம் 1974
பதினைந்தாயிரமாய் இருக்கக் கூடும்
அதன் பொருட்டு அவர்படைப்புகள்
குறைத்து மதிப்பிட முடியாதவை
தமிழின் இருபது நூற்றாண்டுகளில் தோன்றிய அபூர்வமாக தோன்றிய ஒரே ஒரு கவிஞர்
தமிழில்புதிய கவிஞர்கள் இன்னும் பதினைந்து நூற்றாண்டுகள் அவரை விஞ்சக் காத்திருக்க வேண்டும் என கோணங்கி ஒருமுறை சொன்னார்
மார்க்ஸ் ஒருபோதும் நகுலனிடம் உரையாடமாட்டார்
அவர் மீண்டும் மீண்டும் உங்கள் பெயர் என்ன சொன்னீர்கள் என்று மார்க்ஸிடம் கேட்கமுடியாது
கோணங்கியிடம்தான் கேட்பார்.



(3)
THE SLEEP COMPLETING AN EPOCH
The lotus pond stirs
Field-cranes
I ran towards one leg of the rainbow
In the other leg
The woodpecker has swallowed it as some worm.
Have grown nothing
Underneath the rocks I heard crickets singing
The sun would come and go
The scarecrows never change their attires.
Though lying strewn
Can the coins match the leaves in beauty?
Two nude persons completed one Word
The nomad had not even that.
The same river
After singing the tales
Better to bid farewell
The tombs have burrows none
Everything wide open
Oh Love, keep swaying your hip
Softly
Time stages an about-turn
Dear ones
Send fruits to any road
And, weigh the seeds load
Land without cattle
Do not become metonymy
Hopping on their back and dancing
birds are real opulence.
All through the night
the train ferociously chases the river
that has joined the sea.
Think not anything now.
Let’s return into zero, My Love.

***

யுகம் முடித்த உறக்கம்

தாமரைக்குளம் அசைகிறது
வயல் கொக்குகள்
வானவில்லின் ஒருகாலை நோக்கி ஓடினேன்
மறுகாலில்
மரங்கொத்தி அதைப்புழுப்போல விழுங்கி
விட்டது
எதையும் வளர்க்கவில்லை
பாறைகளுக்கு அடியில் தேரை
பாடுவதை கேட்டேன்
சூரியன் வரும்போகும்
சோளக்கொல்லை பொம்மைகள்
ஆடைகள்மாற்றுவதில்லை
சிந்திக்கிடந்தாலும்
இலையழகேது
நாணயங்களுக்கு
இரண்டு நிர்வாணிகள் ஒரு சொல்லை
நிரப்பினார்கள்
நாடோடியிடம் அதுவுமில்லை
அதே ஆறுதான்
கதைகளைப் பாடியபின்
விடை பெறுவது உத்தமம்
கல்லறைகளுக்கு வளைகள் கிடையாது
எல்லாம் வானம் பார்த்த பூமிதான்
காதலே இடையை மெல்ல அசைத்துகொண்டிரு
பருவங்கள் திரும்புகின்றன
அன்பர்களே
பழங்களை எந்தச் சாலைக்கும் அனுப்புங்கள்
விதைகளையும் எடையிடுங்கள்
கால்நடைகளின்றி பூமி இடவாகு பெயராவதில்லை
அவை முதுகில் நின்றாடும் புள்ளே செல்லம்
கடலோடு ஓடிப்போய்விட்ட ஆற்றை இரவெலாம் ஆங்காரமாய் விரட்டிச் செல்கிறது ரயில்
எதையும் எண்ணாதே
பூஜ்யத்திற்குள் திரும்பிவிடலாம் அன்பே

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024