INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, April 2, 2020

NUNDHAKUMAARUN RAAJAA'a POEMS

POEMS BY 
NUNDHAKUMAARUN RAAJAA
(Translated into English by Latha Ramakrishnan  -*First Draft)


1.  WORD SURREAL OF DARK REAL
With day elongating into night
the resonating dance of words stirring
continue climbing aloft
on to the loft
With the deathly wink of the meteoric eyes
chill burns turning into ashes.
squashing the snowdrops
one by one
strangling the larynx of the tummy
Taking one more gulp of water
the interim fasting continues
Ere the impotent rage turn into tornado
lighting the wick of peace
the zero watts moon glow
Seeing and receiving
round and round goes
my helicopter body
circling earth and above.
NundhaaKumaarun Raajaa
March 6 at 8:07 PM •

ஸ்தூல இருளின் சூட்சும சொல்
 நாள் நீள இரவில்
சலனச் சொற்களின் சதங்கை ஆட்டம்
தொடர்ந்து மனப் பரண் ஏறுகிறது
எரிநட்சத்திரக் கண்களின்
சம்ஹாரச் சிமிட்டலில்
சாம்பலாகிறது கூதல்
ஒவ்வொரு பனித்துளியாகச் சிதைத்து
வயிற்றின் குரல்வெளியை நெறித்து
இன்னும் ஒரு மிடறு நீர் பருக
இடைக்கால விரதம் மேலும் நீடிக்கிறது
இயலாமையின் கோபம் புயலாகும் முன்
அமைதியின் திரிக்கு ஒளியேற்றுகிறது
ஜீரோ வாட்ஸ் நிலவொளி
கண்டும் கொண்டும்
இஷ்டம் போல் சுற்றி வருகிறது
என் ஹெலிகாப்டர் உடல்
இவ்வுலகையும்
அவ்வுலகையும்
- நந்தாகுமாரன்


2. HERE AND NOW

Between desire and disposition
Wing’s pendulum
keeps flying.
Between snore and darkness
the name of the Lord
keeps slipping from memory
Between the body and ailments-all
Blood’s resonance keep filling up.
Between patience and
the distance keeps narrowing.
Between word and version
Manthra’s contention keep varying
Between Chithan and Sivan
The Reality of Magic keeps spreading out.
NundhaaKumaarun Raajaa
February 21 at 10:11 AM •

இம்மை

இச்சைக்கும் இயல்புக்கும்
இடையே
பறந்து கொண்டிருக்கிறது
சிறகின் பெண்டுலம்
குறட்டைக்கும் இருட்டுக்கும்
இடையே
மறந்து கொண்டிருக்கிறது
நாதனின் நாமம்
சரீரத்திற்கும் சர்வ-ரோகத்திற்கும்
இடையே
நிறைந்து கொண்டிருக்கிறது
குருதியின் சுருதி
பொறுமைக்கும் சிறுமைக்கும்
இடையே
குறைந்து கொண்டிருக்கிறது
தூரத்தின் மில்லிமீட்டர்
சொல்லுக்கும் பகுப்புக்கும்
இடையே
திரிந்து கொண்டிருக்கிறது
மந்திரத்தின் வாதம்
சித்தனுக்கும் சிவனுக்கும்
இடையே
விரிந்து கொண்டிருக்கிறது
மாயத்தின் எதார்த்தம்

-
நந்தாகுமாரன்
21-02-2020
12:07 AM

3.AFTERTASTE

 It is from this tongue full of the bitter tang of liquor
this sweet word surfaces.
It is from this hour so full of the labyrinths of anonymity that this present emerges
It is from this dust-soaked footprint
that this substantiation ceases to be.
It is from this expression with the fragrance of flower altered
the bliss of this twilight flourishes
It is from this paint of the bathroom walls the feet of lizard scaled upon
the abstract form of this decay is drawn
It is from this desolate circle of the fresh-ever burden of the other shore
the quiver of this myth grooves
It is from this song of blissful ignorant seeking
Life acquires enhanced meaning.

இச்சுவை
----------------
மதுவின் கசப்பேறிய
இந்த நாவில் இருந்து தான்
இந்த இன்சொல்லும் பிறக்கிறது
அநாமதேயத்தின் புதிர்ப் பின்னல் கூடிய
இந்தப் பொழுதில் இருந்து தான்
இந்தத் தற்காலமும் தோன்றுகிறது
அடியின் புழுதி படிந்த
இந்தத் தடத்தில் இருந்து தான்
இந்தத் தடயமும் மறைந்து புதைகிறது
மலரின் மணம் மாறிய
இந்த நவில்தலில் இருந்து தான்
இந்த அஸ்தமனத்தின் ஆனந்தம் மலர்கிறது
பல்லியின் பாதம் அளந்த
இந்த பாத்ரூம் சுவரின் பெயிண்டில் இருந்து தான்
இந்தச் சிதைவின் அரூபம் தீட்டப்படுகிறது
அக்கரையின் பசுஞ்சுமையின்
இந்தப் பாழ் வட்டத்தில் இருந்து தான்
இந்தத் தொன்மத்தின் சலனம் பாத்தி கட்டுகிறது
தேடலின் அறியாமையில் திளைக்கும்
இந்தப் பாடலில் இருந்து தான்
இந்த வாழ்வுக்கும் பொருள் கூடுகிறது
- நந்தாகுமாரன்
29-02-2020
08:10 P
M


No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE