INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Sunday, April 19, 2020

AMUDHAGUNALAN's POEMS

TWO POEMS BY 
AMUDHAGUNALAN
(In memory of him )

(Translated into Latha Ramakrishnan - *First Draft)

(1)
From the camp filled with activists and men of Isms and


literary personalities
one from our midst was removed.

For an act to be performed
suffice to have just some reason.
Whether it is true or false
No need to validate.
In their haste is clearly seen
True Lie.
Ere he could start wondering
when and how he violated the rule that is nonexistent
His hands were chained.
Embarking on the mission to spread knowledge
soon we got used to mint profit
and indulge in self-aggrandizement.
That he is removed, not many know as yet.
Of those who know
Some said that he was chased away;
Some others said that he was relieved.
If chased away
We are slaves
If relieved
We are captives.
Whatever be the case _
Better not to cry hoarse
அமுத குணாளன்
January 13 •
போராளிகளும்
இசவாதிகளும்
இலக்கியவாதிகளும்
குழுமியிருந்த கூடாரத்திலிருந்து
நம்முள் ஒருத்தன் அப்புறப்படுத்தப்பட்டான்
ஒரு செயல் நிகழ்த்த காரணம் மட்டும் வேண்டும்
அது
பொய்யா?
உண்மையா? அவசியத்திற்கான தேவையில்லை
அவர்களின் அவசரத்தில் தெளிகிறது
பொய்யின் உண்மை
இல்லாத விதியை எப்படி மீறினொம் என
எண்ணுவதற்குள்
விலங்கேறியிருக்கிறது அவன் கைகளில்
அறிவை பரப்ப ஆரம்பித்து
லாபம் பெருக்கவும்
சுய விளம்பரம் தேடவும் பழகிப்போனோம்
இன்னும்
பலரும் அறிந்திக்கவில்லை
அவன் அப்புறப்படுத்தப்பட்டது
அறிந்தவர்களில் சிலர்
அவன் விரட்டப்பட்டான் என்றார்கள்
சிலர்
விடுவிக்கப்பட்டான் என்றார்கள்
அவன் விரட்டப்பட்டிருந்தால்
நாம் அடிமைகள்
அவன் விடுவிக்கப்பட்டிருந்தால்
நாம் கைதிகள்
எதுவாகினும்
அடக்கி வாசிப்பதே அழகு

(2)
Victory Predetermined
and the Defeat, not so
Failure Predetermined
and the Success, not so
keep revolving
In the space sans centre and verge
Crown changing heads
or stationed on the same
Everyone’s sword
in their own respective hands
The War with armaments
sans shield or sword
made equivalent –
Oh the wonder (bazaar) of it all.
And we are slaves
an unacknowledged or
cannot be overlooked part of the
War.
With we being rolled and tossed
Who to win who to lose
The magical digit gleams.
Whoever be the chosen one
should endure the sword pierced
five inch deep into the abdomen.
That is our bounden duty.
Even if it is five inches more.
We are yet to get ready for the battle.
அமுத குணாளன்
May 24, 2019 •
தீர்மானிக்கப்பட்ட வெற்றியும்
தீர்மானிக்கப்படாத தோல்வியும்
தீர்மானிக்கப்பட்ட தோல்வியும்
தீர்மானிக்கப்படாத வெற்றியும்
சூழன்றுகொண்டிருக்கிறது
மையமும் விளிம்புமற்ற வெளியில்
மகுடம் தலைகள் மாறிக்கொண்டு
அல்லது
அதே தலையில்
அவர்அவர்களுக்கான வாள்
அவர்களிடமே
கேடயமும் வாளுமற்று
படைபலத்தோடுடனான சமர்
சமதையாக்கப்படும் வி(ச)ந்தை
நாம்
போரில் அங்கிகரிக்கப்படாத அங்கம்
அல்லது
உதாசீனப்படுத்த முடியாத அடிமைகள்
யார்
வெல்வது தோற்பதென்று
நாம்
உருட்டப்பட உருட்டப்பட
ஒளிர்கிறது மாய எண்
தேர்வாளர் யாராகினும்
அடிவயிற்றில் ஐந்தங்குல ஆழ
உள்நுழைக்கும் வாளை பொருத்தாக வேண்டும்
அதுவே
நம் கடமை
இன்னும் ஐந்தங்குலமெனினும்
இன்னும்
நாம் போரிட ஆயத்தமாகவில்லை
அமுதகுணாளன்
25/05/2019


No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024