INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Saturday, April 18, 2020

FIROSKHAN JAMALDEEN's POEM

A POEM BY 
FIROSKHAN JAMALDEEN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

POETRY AND THE ICE-STICK
Ere the sun writes a poem
I should drink a child that savours the sight of an ice-stick.
A tree rattles about
*‘Ummaachis’ who tell tales of primordial time,
about sweat
and the thousand of censures that its odour gives forth
and the heat that the sun sends into the body
excessively.
The tales grandpa tells
for quenching the thirst with tender-coconut water
are also real long.
Sunny days are
festival time for the trees in the yard.
The giggles of the young women picking lice
The travail and turmoil of their lives
and joyous love
would see off the noon time
The trees narrate the sequence of events to me
I am still gazing at the child that goes on relishing the ice-stick.
Now the stick-ice vendor approaches me
and, relieving itself from writing the sun
the heart turns rapturous for savouring the ice-cream.

*Ummachi : Gods

கவிதையும் ஐஸ் குச்சியும

வெயில் கவிதையொன்றை எழுதுவதற்கு முன்னர்
ஒரு ஐஸ் குச்சியை
ரசிக்கும் குழந்தையை
நான் அருந்தி முடிக்க வேண்டும்.
ஒரு மரம்
ஆதிக் கதைகளை பேசி உழறும்
உம்மாச்சிகளையும்
வியர்வை பற்றியும்
அதன் வாசனையெழுப்பும்
பல்லாயிரம் விமர்சனங்களையும்
வெயில் வெகுவாக உடலினுள் புகுத்தும் சூட்டையும்
அறிவிப்பு செய்கிறது.
இளநீர் கொண்டு தாகம் தீர்க்கவென தாத்தா
சொல்லும் கதைகளும்
நீண்டது.
வெயில் காலமென்றால்
முற்றத்து மரங்களுக்கு பெருநாள்.
தலைப் பேன் பார்க்கும் குமரிகளின்
சல்லாப சிரிப்புக்களையும்
சஞ்சலமான வாழ்க்கை குமுறல்களையும்
சந்தோச காதலனெவும்
மத்தியானப் பொழுதை கரைத்து விடும்
நிகழ்வுகளை மரங்கள் எனக்கு
சொல்லிக் கொண்டு வருகின்றன
நான் இன்னும் ஐஸ் குச்சியை அபாரமாக
ரசித்து ருசிக்கும் அந்த குழந்தையை
பார்ப்பதிலிருந்து விடுபடவில்லை
இப்போது ஐஸ் குச்சிக்காரன் என்னை
நெருங்குகிறான்.
இப்போது
வெயிலை எழுதுவதிலிருந்து மெதுவாக விடுபட்டு
மனசு ஐஸ் சாப்பிடுவதை விரும்பி விடுகிறது.
..
ஜே.பிரோஸ்கான்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024