INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Sunday, April 19, 2020

ILAMPIRAI's POEMS

THREE POEMS 
BY 
ILAMPIRAI

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

1. PLEASE FORGIVE US



 Arsenals and warplanes
have turned useless garbage
in front of the virus beyond our vision
that turns heady in the wails of the dying.

The raging words of comrades
crying against globalization
are now dripping as the tears
of those construction workers
who lie starving in the heat-oozing
tin-camps

In the long desolate roads that lie still as
pythons just had their prey
the Sun and the Moon come all alone
and shine in vain
Without the joy of turning the fallen withered leaves
upside down
the air remains silent.

The total absence of human sound
proving morbid
the birds returning to their nests
fly across the space
sans the deafening noise of aircrafts
feeling confused.
The soul of Life’s planet is shuddering
as a lone soldier seized
The travails and traumas of humanity
never ever dreamt of
is too hard to bear
Please leave us
Have mercy on us
Forgive us for our despicable ploys and deceits
O deadly Corona
We beseech you
Please allow the children to play
Ath the threshold
At least for saving the Gods
We need humans

March 26 at 11:05 PM •
மன்னித்து விடு
ஆயுதக் கிடங்குகளும்
போர் விமானங்களும்
அர்த்தமற்றக்
குப்பைகளாகின.
மரண ஓலங்களில்
மயங்கித் திரியும்
கண்ணுக்குப் புலப்படா
வைரஸின் முன்
உலகமயமாக்கலை
எதிர்த்து ஒலித்த
காம்ரேட்டுகளின்
செஞ்சொற்கள்
வெப்பம் கசியும்
தகரக் கூடாரங்களில்
பசித்துக் கிடக்கும்
கட்டுமானத் தொழிலாளர்களின்
கண்ணீர்த் துளிகளாக
உதிர்ந்து கொண்டிருக்கின்றன.
அசைவற்றுக் கிடக்கும்
இரையுண்ட மலைப்பாம்புகள் போன்ற
பயண வழிப்பாதைகளில்
தனித்தனியே வந்து
காய்ந்து போகின்றன
கதிரும் நிலவும்.
சருகுகளைப்
புரட்டி விளையாடும்
சந்தோஷமின்றி
மவுனித்திருக்கிறது காற்றும்
மனித ஒலியற்ற அச்சத்தில்
வானூர்திகளின்
இரைச்சலற்றவெளியை
குழப்பத்துடனேயே கடக்கின்றன
கூடடையும் பறவைகள்.
நடுங்கிக் கொண்டிருக்கிறது
உயிர்க்கோளத்தின் ஆன்மா
தனித்துச் சிக்கிய
பனிமலைப் போர்வீரனாக.
தாங்க முடியவில்லை
கனவிலும் நினையாத
மானுட குலத்தின்
ஊன் உயிர் வாதைகள்
எம் கீழ்த்தரமான சூழ்ச்சிகளையும்
தந்திரங்களையும்
மன்னித்துப் போய்விடு
மரண கொரோனாவே
குழந்தைகளை
விளையாட விடு
வாசல்களில் .
கடவுள்களைக்
காப்பாற்றுவதற்கேனும்
மனிதர்கள் வேண்டும்.
***


2. A WORD
Dying in thirst yet can’t have a gulp

_ so streams as sewage
the power of words, their implications.
“You can always knock at my door” _
even if anyone has said so
Don’t ever try it even once.
“I am right here_ _
No matter how many times these words
have been uttered
Don’t ever believe that there is someone
anywhere.
They might’ve told you to call them for help
at any hour
But never call out, even in an emergency
I beseech you _
Don’t believe in words and suffer indignity
Words uttered are nothing more than
verbalizing conventionally.
(*From her poem-collection titled NEE EZHUDHA MARUKKUM ENADHAZHAGU'( My Beauty that you care not to write)

Ilampirai
April 12 at 12:33 PM •
ஒரு வார்த்தை
கடுந்தாகத்திலும் பருகிட முடியாத
கழிவுநீராகப் பெருக்கெடுத்தோடுகின்றன
சொற்களின் பலமும் அர்த்தங்களும்
" எப்போது வேண்டுமானாலும்
கதவைத் தட்டலாம்" எனக் கூறியிருந்தாலும்
ஒருமுறை கூடத் தட்டிவிடவேண்டாம்.
நானிருக்கிறேனென
எத்தனைமுறை கூறியிருந்தாலும்
யாரும் இருப்பதாக
ஒருபோதும் நம்பிவிடவேண்டாம்.
நினைத்தக் கணம்தோறும்
அழைக்கக் கூறியிருந்தாலும்
அவசரத்திற்குக் கூட
குரல் கொடுத்திட வேண்டாம்.
தயவுகூர்ந்து கேளுங்கள்
சொற்களை நம்பி நீங்கள்
அவமானப்பட வேண்டாம்.
ஒரு வார்த்தை சொல்லவேண்டுமே என்பதற்காக
வார்த்தைகள் சொல்லப்படுகின்றன.
இளம்பிறை
( நீ எழுத மறுக்கும் எனதழகு ,தொகுப்பிலிருந்து)

(3)


Crow parrot vulture crane – Oh!
All such names belonging to your clan
are but the winged ones and sparrows to me.
So soft and so lovely you’re _
Whose name I am unaware.
Just as gathering words for an emotion-filled verse
bringing in its beak tiny strands of rope
You are collecting them in the electric fan of the niche
I contemplate on how you would struggle for that.
Don’t, dear sparrow
Build your nest upon a tree only.
There at least storms arrive only rarely.
We are humans
That’s why I am telling
O splendorous sparrow.

Ilampirai: “ This poem is dedicated to the sparrow that visits our home


Ilampirai

காகம் கிளி பருந்து கொக்கென
உம்மினத்துப் பெயர் அறிதல் சொற்பமே
பறப்பன எல்லாம்
பறவைகளும் குருவிகளும் தான் எனக்கு
இவ்வளவு மென்மையாகவும்
அழகாகவும் இருக்கும்
உன் பெயர் என்னவென அறியேன்
உணர்வு பெருகும்
கவிதை ஒன்றிற்கு
சொற்கள் சேர்ப்பதுபோல்
சிறுசிறு நார்களை
அலகில் ஏந்தி வந்து
மாடத்து மின்விசிறியில்
சேகரித்துக் கொண்டிருக்கிறாய்
அதற்கென நீ படும் சிரமங்களை
நினைத்துப் பார்க்கிறேன்
வேண்டாம் குருவியே
உன் கூட்டை ஒரு மரத்திலேயே
கட்டிக் கொள்
அங்கே எப்போதாவதுதான்
புயலடிக்கும்
நாங்கள் மனிதர்கள்
அதனால்தான் சொல்கிறேன்
அழகுக் குருவியே .

- இளம்பிறை
வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும் குருவிக்காக இன்று எழுதிய கவிதை.

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE