TWO POEMS BY
ILANGO KRISHNAN
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
1. CALM
This summer burns like an oven
At night when the cricket wails abysmally
a boy feeling feverish urinates
The yellow marble crystals of ailment
a boy feeling feverish urinates
The yellow marble crystals of ailment
with string untying, scatters.
The salty stench proving unbearable
the wind turning away its face
Neem-flowers drop
Some ripened leaves atop
drop
Up above
so high
two stars drop
Momentarily
May I drop asks Earth
Gently a hand touches his shoulder
and instantly peace comes to prevail all around.
The salty stench proving unbearable
the wind turning away its face
Neem-flowers drop
Some ripened leaves atop
drop
Up above
so high
two stars drop
Momentarily
May I drop asks Earth
Gently a hand touches his shoulder
and instantly peace comes to prevail all around.
நிம்மதி
---
இந்த வேனிற் காலம்
ஓர் அடுப்பு போல் தகிக்கிறது
சுவர்க்கோழிகள் நாரசமாய் கதறும்
இரவில்
காய்ச்சலுடன் சிறுநீர் கழிக்கிறான்
ஒரு சிறுவன்
நோய்மையின் மஞ்சள் பளிங்கு முத்துக்கள்
நூலவிழ்ந்து உதிர்கின்றன
உப்பின் நெடி தாளாது
காற்று முகம் திருப்ப
வேப்பம் பூக்கள் உதிர்கின்றன
உச்சிக் கிளைகளில்
சில பழுத்த இலைகள் உதிர்கின்றன
உயரத்தில்
மிக உயரத்தில்
இரண்டு விண்மீன்கள் உதிர்கின்றன
ஒரு கணம்
உதிரவா என்கிறது பூமி
ஆதூரமாய் அவன் தோளைத் தொடுகிறது
ஒரு கரம்
சட்டென எங்கும் பரவுகிறது நிம்மதி.
*
2. CORONA SCENARIO
In this night
when the city is changing into a memory
ஒரு கொரோனா கால சித்திரம்
நகரம் அனைவருக்கும்
ஒரு நினைவாய் மாறிக்கொண்டிருக்கும்
இவ்விரவில்
ஒவ்வொருவர் கனவிலும்
விரிகிறதது நேற்றின் நகரம்
இன்றின் நகரவாசிகள்
அதில் உலவிக்கொண்டிருக்கிறார்கள்
குறுக்கும் நெடுக்குமாய்
முன்னால் மடங்கும்
கால்களைக் கொண்டு
பின்னால் நகர்வதைப் போன்ற
விநோதம் அது
காலமோ உறையாத நதியாய்
முன்னோடுகிறது
கதவு திறந்து எடுக்கப்படாத
நாளிதழ்களோடு
அந்த வீட்டின் முன்
வைக்கப்பட்டிருக்கின்றன
நான்கு நாட்கள்
வாடிக்கொண்டிருக்கும் பூங்கொத்தாய்
உள்ளே
மிக உள்ளே
ஒரு கிழவி
தன் என்பத்தொரு வயதின்
கடைசி நாளை
நான்காவது நாளாய்
எடுக்காது உறங்கிக்கொண்டிருக்கிறாள்
அத்தனை அயர்ச்சியோடு
for one and all
In each one’s dream
Yesterday’s city opens
The urban-folks of Today
are strolling in it
to and fro
Something weird it is
as moving backward with
legs buckling in front
But Time runs ahead
as river unfrozen
With Dailies not taken with door opened
there kept at the door of the house
_ Four Days.
As rotting bouquet
inside
deep inside
not fetching the last day of her
81st birthday
for the fourth day
an old woman is sleeping
with immense fatigue.
In each one’s dream
Yesterday’s city opens
The urban-folks of Today
are strolling in it
to and fro
Something weird it is
as moving backward with
legs buckling in front
But Time runs ahead
as river unfrozen
With Dailies not taken with door opened
there kept at the door of the house
_ Four Days.
As rotting bouquet
inside
deep inside
not fetching the last day of her
81st birthday
for the fourth day
an old woman is sleeping
with immense fatigue.
ஒரு கொரோனா கால சித்திரம்
நகரம் அனைவருக்கும்
ஒரு நினைவாய் மாறிக்கொண்டிருக்கும்
இவ்விரவில்
ஒவ்வொருவர் கனவிலும்
விரிகிறதது நேற்றின் நகரம்
இன்றின் நகரவாசிகள்
அதில் உலவிக்கொண்டிருக்கிறார்கள்
குறுக்கும் நெடுக்குமாய்
முன்னால் மடங்கும்
கால்களைக் கொண்டு
பின்னால் நகர்வதைப் போன்ற
விநோதம் அது
காலமோ உறையாத நதியாய்
முன்னோடுகிறது
கதவு திறந்து எடுக்கப்படாத
நாளிதழ்களோடு
அந்த வீட்டின் முன்
வைக்கப்பட்டிருக்கின்றன
நான்கு நாட்கள்
வாடிக்கொண்டிருக்கும் பூங்கொத்தாய்
உள்ளே
மிக உள்ளே
ஒரு கிழவி
தன் என்பத்தொரு வயதின்
கடைசி நாளை
நான்காவது நாளாய்
எடுக்காது உறங்கிக்கொண்டிருக்கிறாள்
அத்தனை அயர்ச்சியோடு
No comments:
Post a Comment