TWO POEMS BY
VIKRAMADHITHYAN
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
Being here
Not sure.
Not sure.
This too
So True
So True
Incapable of being
anywhere
anywhere
To be stationed in one place
like the tree
is boon indeed.
like the tree
is boon indeed.
Remorse
No use
No use
All are drained
labelling
labelling
Only I know the pain
of being non-being.
of being non-being.
இப்போது அங்கே
இல்லை நான்
இல்லை நான்
நிறைய பேர்
நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் அப்படித்தான்
நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் அப்படித்தான்
இங்கே
இருப்பதும் நிச்சயமில்லை
இருப்பதும் நிச்சயமில்லை
இதுவும்
உண்மை
உண்மை
எங்கேயும்
இருக்கமுடியவில்லை
இருக்கமுடியவில்லை
மரம்போல ஒரேஇடத்தில்
இருக்கவும் கொடுத்துவைத்திருக்கவேண்டும்
வருத்தப்பட்டு
பிரயோஜனமில்லை
இருக்கவும் கொடுத்துவைத்திருக்கவேண்டும்
வருத்தப்பட்டு
பிரயோஜனமில்லை
முத்திரை குத்தி
ஓய்ந்துவிட்டார்கள் எல்லோரும்
ஓய்ந்துவிட்டார்கள் எல்லோரும்
எனக்குத்தான் தெரியும்
இருக்கிறமாதிரி இருக்கிறதன் வேதனை
இருக்கிறமாதிரி இருக்கிறதன் வேதனை
(விக்ரமாதித்யன் கவிதைகள் – (2001)
(2)
Won’t the carpenter
who for ever keeps making tables chairs doors
Feel tired of it all
Don’t know.
Feel tired of it all
Don’t know.
The tea-master who stands there since morning _
Won’t he feel irksome
Don’t know, Oh, don’t know.
Won’t he feel irksome
Don’t know, Oh, don’t know.
Presenting the budget year after year
and responding to the demand for Grant
to the Police Department
Won’t it all prove annoying to the
Hon’ble Chief Minister
How do we know?
and responding to the demand for Grant
to the Police Department
Won’t it all prove annoying to the
Hon’ble Chief Minister
How do we know?
Welcoming the Premiers of foreign Lands,
kings and queens
playing the host and seeing them off
Won’t it all make His Excellency the President
woefully weary _
Who knows
kings and queens
playing the host and seeing them off
Won’t it all make His Excellency the President
woefully weary _
Who knows
Entrapping experiences and feelings in words
and writing poetry endlessly _
turning somewhat like
a poetry-producing machine
maddens me.
and writing poetry endlessly _
turning somewhat like
a poetry-producing machine
maddens me.
காலமெல்லாம்
மேஜை நாற்காலி நிலைக்கதவு செய்யும்
தச்சாச்சாரிக்குச் சலிப்பு தோன்றாதா
தெரியாது.
மேஜை நாற்காலி நிலைக்கதவு செய்யும்
தச்சாச்சாரிக்குச் சலிப்பு தோன்றாதா
தெரியாது.
காலையிலிருந்து
கால்கடுக்க நிற்கும் டீ மாஸ்டர்
எரிச்சல்பட்டுக்கொள்ள மாட்டாரா
தெரியாது தெரியாது.
கால்கடுக்க நிற்கும் டீ மாஸ்டர்
எரிச்சல்பட்டுக்கொள்ள மாட்டாரா
தெரியாது தெரியாது.
வருஷா வருஷம் நிதிநிலை அறிக்கை வாசிப்பதும்
போலீஸ்மான்யக் கோரிக்கைக்குப்பதிலளித்துப் பேசுவதும்
சள்ளையாக இரதா மாண்புமிகு முதல்வருக்கு
நமக்கென்ன தெரியும்
போலீஸ்மான்யக் கோரிக்கைக்குப்பதிலளித்துப் பேசுவதும்
சள்ளையாக இரதா மாண்புமிகு முதல்வருக்கு
நமக்கென்ன தெரியும்
அயல்நாட்டு பிரதமர்கள் ஜனாதிபதிகள் மன்னர்கள் ராணிகளை
வரவேற்று உபசரித்து வழியனுப்பிவைப்பதில்
அலுத்துக்கொள்ள மாட்டாரா மேன்மைதங்கிய குடியரசுத்தலைவர்
யாருக்குத் தெரியும்
வரவேற்று உபசரித்து வழியனுப்பிவைப்பதில்
அலுத்துக்கொள்ள மாட்டாரா மேன்மைதங்கிய குடியரசுத்தலைவர்
யாருக்குத் தெரியும்
அனுபவங்கள் உணர்வுகளை வார்த்தைகளில் பிடித்துவைத்து
கவிதைசெய்து கவிதைசெய்து
கவிதை செய்யும் யந்திரம் போலானதில்
கடுப்பாகிப் போகிறேன் நான்.
கவிதைசெய்து கவிதைசெய்து
கவிதை செய்யும் யந்திரம் போலானதில்
கடுப்பாகிப் போகிறேன் நான்.
(விக்ரமாதித்யன் கவிதைகள் – 2001)
No comments:
Post a Comment