INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, April 2, 2020

IYARKKAI's POEM

A POEM BY 
IYARKKAI
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

MY OWN BAMBOO SHOOT
This day it has pierced me with its thorn
Through the fractured flesh
blood seeps hesitantly.
The message of all that reluctance is
but just this:
I shouldn’t be angry
What at all my anger could do
And also, is it something new….
Till the time it attains beauty exquisite
Without fail, should water it.
Some more time
the flesh would suffer fissures
Some more cracks
Some more drops
Should tend that bamboo shoot
till it turns fully grown.
The other bamboo shoot
knows me not….
One day
I should play
My music
My music Absolute.
That’s all .

இயற்கை

பிரத்தியேக மூங்கில்
**********************
-
இயற்கை
இன்றது தனது முள்ளால்
கையை கிழித்துவிட்டது
உடைந்த சதையின் விரிசல் வழியே
தயங்கித் தயங்கி கசிகிறது குருதி
அத்தனை தயக்கத்தின்
சேதி
இதுதான்
நான் கோபம் கொள்ளக் கூடாது
என் கோபம் மட்டும் என்ன செய்துவிடப்போகிறது
மட்டுமில்லாமல் இது புதிதா என்ன
ஒரு பொருத்தமான வனப்பை எட்டும்வரை
அதற்குத் தண்ணீர் ஊற்றியே ஆகவேண்டும்
மேலும் சில முறைகள் சதை உடையலாம்
மேலும் சில விரிசல்கள்
மேலும் சில சொட்டுகள்
அந்த மூங்கிலை
அந்தப் பொருத்தமான வனப்புவரை
வளர்த்தெடுப்பேன்
இன்னொரு மூங்கிலுக்கு
என்னை
என்ன தெரியும்
ஒருநாள் வாசிக்கவேண்டும்
என்னிசையை
எனது பரிபூரண இசையை
அவ்வளவுதான்.


No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE