INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Friday, December 11, 2020

INSIGHT (a bilingual blogspot) DECEMBER 2020 POETS IN THIS ISSUE

  INSIGHT

(Dec 2020)

POETS IN THIS ISSUE

1. LAKSHMI MANIVANNAN
2. RAGAVAPRIYAN THEJESWI
3. SUGANYA GNANASOORI
4. AASU SUBRAMANIAN(2)
5. TAMIL MANAVALAN
6. KARUNAKARAN SIVARASA(2)
7. YAVANIKA SRIRAM(2)
8. NUHA
9. MANONMANI
10. RAMESH PREDAN(2)
11. MA.KALIDASS(2)
12. YUGAYUGAN(RENGARAJAN VEERACHAMI(2)
13. SRIDHAR BHARATHI
14. KO.NATHAN(EGATHUVAN)
15. PERUMAL ACHI
16. MALINI MALA
17. OLUVIL SHIBA SHIBA(2)
18. SHANMUGAM SUBRAMANIAM
19. RAVI SUBRAMANIAN(2)
20. MARIMUTHU SIVAKUMAR
21. THARIK THASKI
22. VELANAIYUR RAJINTHAN
23. ARUN
24. ILANGO KRISHNAN
25. ILAMPIRAI
26. THAMIZHNATHI
27. PALAIVANA LANTHER(2)
28. THARMINI
29. J.WAHABDEEN
30. NESAMITHRAN
31. A.K.MUJARATH
32. S.BRINDHA
33. IYYAPPA MADHAVAN
34. MIZRA JABBAR
35. S.P.BALAMURUGAN
36. S.THILAKAVATHI
37. NUNDHAKUMAARUN RAAJAA(2)
38. THIRUGNANASAMPANTHAN LALITHAKOPAN
39. ABDUL JAMEEL
40. PON ILAVENIL.B

PON ILAVENIL B'S POEM

 A POEM BY

PON ILAVENIL B

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


THE CRAZY ONE’S COURSE
How to say it all…..
In the sound of air
heard from afar
the language
flutters and quivers
The serene silence
that would forever be near _
Oh why has it gone afar
and playing tricks
Ere this hour
what was it ruminating
Why all too suddenly
it peeps into the course of the crazy
Mixing the gestures of peace
why it highlights distress
Something happening somewhere
Why here
the poem despairs
O, leave it
All are but
the interactions of the Universe.
In the midst of it all
I , a tiny spec of dust
absolutely hapless.
Pon Elavenil B
கிறுக்கன் செல்லுகிற பாதை
______
என்னவென்று சொல்லுவேன்
எங்கோ கேட்ட
காற்றின் ஓசையில்
பட படத்து துடிக்கிறது
மொழி
எப்பொழுதும் கடந்து செல்லும் அமைதி
சுற்றத்தில் இல்லாமல்
தொலைவில் சென்று ஏன்
வித்தை காட்டுகிறது
இதற்கு முன்னதாக
என்ன நினைத்து இருந்தது
ஏன் திடீரென
கிறுக்கன் செல்லுகிற பாதையை
எட்டிப் பார்க்கிறது
அமைதியின் சைகைகளை
குழைத்து ஏன்
பதட்டத்தை முன்னிறுத்துகிறது
எங்கோ ஏதோ நிகழ
இங்கு ஏன்
கவிதை சலசலக்கிறது
விடு
எல்லாம் பிரபஞ்சத்தின்
பரிமாற்றங்கள்
இடையில்
நான்
என்ன
சிறு தூசு

ABDUL JAMEEL'S POEM

 A POEM BY

ABDUL JAMEEL

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

CATS

Though food served in time never delayed
at the place where it is offered
Only on hearing the unique voice of grandpa
sounding all too familiar
approach nearer and plead with their language _
those stray cats that arrive at the threshold
in trepidation
with the great expectation of finding
fish thorn at least
in the plate.
Just as these cats
most of those abandoned hapless boys
in our midst
keep going from street to street
with the hope of finding
some grandpa.

பூனைகள்
______
என்னதான் நேரம் தவறாது
உணவு பரிமாறிடினும்
சாப்பாட்டுப் பந்தியில்
நன்கு பழக்கப்பட்டுப் போன
மூத்தப்பாவின் தனித்த குரல்
கேட்கும் பட்சத்தில் மட்டுமே
உடன் நெருங்கி வந்து
தனது மொழியால் இரஞ்சுகின்றன
தினமும் வீட்டு வாசலுக்கு
ஒஞ்சியொஞ்சி வந்து செல்லும்
கட்டாக்காலி பூனைகள்
ஆகக் கூடிய பட்சம் மீன் முட்களாவது
தட்டத்தில் கிடைக்குமென்ற
மாபெரும் எதிர்பார்ப்போடு
இந்தப் பூனைகள் மாதிரி
நம்மிடையும் கைவிடப்பட்ட
அனேகமான சிறுவர்கள்
யாரோ ஒரு மூத்தப்பாவை
எதிர்பார்த்து தெருத் தெருவாய்
அலைந்து திரிகின்றனர்தான்

அப்துல் ஜமீல்

THIRUGNANASAMPANTHAN LALITHAKOPAN'S POEM

 A POEM BY

THIRUGNANASAMPANTHAN LALITHAKOPAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


The tortoise hearts
go into hiding
behind iron locks….
The droplets of sweat oozed in those days
when we played ‘Thattaamaalai’
we conceal in perfumes….
The bitter taste of salt
at one end of the lip
at those instances of wading through the sun
You eulogize in the lines of poems…..
Could it be that
in those days of bearing the title ‘Tharkuri’
the Alphabetics of your glorious hours
came into being….

Thirugnanasampanthan Lalithakopan

இரும்பு பூட்டுக்களின் பின்னே
பதுங்கி கொள்கின்றன
ஆமை இதயங்கள்.....
தட்டாமாலை சுற்றி
விளையாடிய நாட்களில்
கசிந்த வியர்வைத் துளிகளை
மறைத்து கொள்கிறோம்
நறுமண தைலங்களில்....
வெயிலோடிக்கடந்த
கணங்களில் உதட்டோரம்
கரித்த உப்பின் சுவைதனை
மெச்சி கொள்கிறாய்
கவிதை வரிகளில்....
"தற்குறியென" பட்டம்
சுமந்த நாட்களில்
தோன்றியிருக்க கூடுமா
உனது மாட்சிமை பொழுதுகளின்
அகர முதல்கள்...
-லலித்தா-

NUNDHAAKUMAARUN RAAJAA'S POEMS(2)

TWO POEMS BY

NUNDHAAKUMAARUN RAAJAA

Translated into English by Latha Ramakrishnan and the poet(*First Draft)
1.THE ROBOTIC NIGHT
COMING FOR A DIALOGUE


Extending ‘how do you do’ to the stars
coming in view
the Moon moves on
It keeps moving on.
For crossing the distance of night
the wings of fans flutter
and they go on fluttering.
It is along the orbit that the bats select
the earth now revolves.
and it goes on revolving.
The dusk of awakening
goes searching for the primordial night
in the facsimiles of night-time
and it goes on searching
Once entering the realm of sleep
the robotic night coming to converse
crossing the commercial- ad dreams
keeps saying just this on a 'circadian rhythm'
and it keeps on saying.
O, has the Sleep gone
Is the Dawn born
The night-flowering jasmines shed
They keep shedding
The squirrels screech
They go on screeching
The koel coos
It goes on cooing.

உரையாட வரும் எந்திர இரவு

கண்ணுக்குச் சிக்கிய நட்சத்திரங்களிடம்
நலம் விசாரித்தபடி நகர்கிறது நிலவு
நகர்ந்து கொண்டேயிருக்கிறது
இரவின் தூரத்தைக் கடக்க
மின்விசிறிகளின் சிறகுகள் பறக்கின்றன
பறந்து கொண்டேயிருக்கின்றன
வௌவால்கள் திட்டமிடும் பாதையில் தான்
இப்போது பூமி சுழல்கிறது
சுழன்று கொண்டேயிருக்கிறது
ஜாமத்தின் பிரதிகளில்
ஆதியிரவைத் தேடி அலைகிறது
விழிப்பின் அஸ்தமனம்
அலைந்து கொண்டேயிருக்கிறது
தூக்கத்தின் தளத்தில் நுழைந்ததும்
விளம்பரக் கனவுகள் தாண்டி
உரையாட வரும் எந்திர இரவு
இதைத் தான் நாள்தோறும் சொல்கிறது
சொல்லிக் கொண்டேயிருக்கிறது
தூக்கம் விட்டதோ
விடியல் தொட்டதோ
பவழமல்லிகள் உதிர்கின்றன
உதிர்ந்து கொண்டேயிருக்கின்றன
அணில்கள் கீச்சிடுகின்றன
கீச்சிட்டுக் கொண்டேயிருக்கின்றன
மாங்குயில் கூவுகிறது
கூவிக் கொண்டேயிருக்கிறது

NUNDHAAKUMAARUN RAAJAA


(2)
I F YOU WANT TO WRITE….



If you want to write poetry like Charles Bukowski
You should become Charles Bukowski
Alright , leave him
For writing like the creations of one you like
(Don’t want to list out the names here)
You should become the respective He or she.
This ‘becoming ‘ is the key
Nothing should become more
or less.
That the good and the bad of the phrase
‘The rain of action is the dust of energy’
should be of the same proportion _
In this message lies
the handcuff for the captive of this news.
That’s why
‘ Mind your own business’ said one.
The magic of transforming news into poetry
He didn’t want to teach anybody.
You attempting to lead a life
choosing the good traits alone
of another person
is a crime.
in the focus of your motivation
the way sounds getting blunted
and coming face to face with their ideal death
_ have you crossed sympathizing as
accident happened to someone unknown.
You would have had some more important work.
Then Why What for How
could you turning into another
be possible now.

NundhaaKumaarun Raajaa

எழுத வேண்டுமெனில்
சார்ல்ஸ் ப்யுகோவ்ஸ்கி மாதிரிக் கவிதை எழுத வேண்டுமெனில்
நீங்கள் 'சார்ல்ஸ் ப்யுகோவ்ஸ்கி' ஆக வேண்டும்
சரி அவர் வேண்டாம்
உங்களுக்குப் பிடித்த ஒருவரின் படைப்புகள் போல
(இங்கே பட்டியல் போட விரும்பவில்லை)
நீங்களும் படைக்க வேண்டுமெனில்
நீங்களும் 'அவராக' வேண்டும்
இந்த 'அவராவது' என்பது தான் சூட்சுமம்
எதுவும் கூடவோ எதுவும் குறையவோ
கூடாது
'செயலின் மழை தான் சக்தியின் புழுதி' என்ற சொற்றொடரின்
நல்லதும் கெட்டதும் அதே சரி விகிதத்தில்
இருக்க வேண்டும்
என்பதில் தான் இருக்கிறது
இந்தச் செய்தியின் கைதிக்கு வழங்கப்பட்டிருக்கும்
விலங்கு
எனவே தான்
'உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள்' என்றார்
ஒருவர்
செய்தியைக் கவிதையாக்கும் வித்தையை
அவர் யாருக்கும் கற்றுத் தர விரும்பவில்லை
இன்னொருவரின் நற்பண்புகளை மட்டும் தேர்ந்து
நீங்கள் வாழ முனைவது ஒரு குற்றம்
செயலூக்கத்தின் கவனக் குவிப்பில்
சப்தங்கள் முனை மழுங்கித்
தம் லட்சியச் சாவைத் தரிசிப்பதை
நீங்கள் யாரோ ஒருவரின் விபத்து போலப்
பரிதாபப்பட்டுக் கடந்து போயிருக்கிறீர்களா
உங்களுக்கு வேறு முக்கிய வேலை இருந்திருக்கும்
அப்புறம் ஏன் எதற்கு எப்படி
நீங்கள் யாரோ வேறு ஒருவராவது
சாத்தியம்


THARMINI'S POEM

 A POEM BY

THARMINI


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


Upon the cheeks of houses
visited by guests none
the scar of loneliness.
*
Along the way, someone.
Must be known.
The eyes shine.
The face in front
with lips concealed, smiles.
Henceforth should learn to grin
with the eyes.
*
Not hugging the shoulders of those
who weep
Not holding the arms
O, where to keep
both the hands?
*
Hunger the worst of all viruses
So between the teeth gnawing
days and months
Blood oozing
Breathless and choked
Time moves on.
bare
nowhere.

Tharmi Ni
விருந்தினர் வருகையற்ற
வீடுகளின் கன்னங்களில்
தனிமையின் வடு.
*
வழியில் யாரோ தெரிந்தவராகத்தானிருக்கும்
விழிகள் ஒளிர்கின்றன
மறைக்கப்பட்ட உதடுகளால் முறுவல் செய்கிறார்
இனிக் கண்களால் சிரிக்கப் பழகவேண்டும்.
*
விம்மியழுபவரின் தோள்களைத் தழுவாமல்
கரங்களைப் பற்றாமல்
இரு கைகளையும் எங்கே வைப்பது?
*
பெரும்பிணி
பசிப்பிணியென
நாட்கள்,மாதங்களை இறுகக் கடித்த பற்களிடையே
குருதி வடிய
மூச்சு வாங்க
காலம் ஒன்றுமற்று நகர்கிறது

S.P.BALAMURUGAN'S POEM

 A POEM BY

S.P.BALAMURUGAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)



THE ROOM WHERE ASH-CATS SLEEP
Nature has always been telling us many things
right from the very beginning.

Changes in species
are charged with meaning.
Tsunami
Earthquake
Tornado Cyclone….
We no more care for the old habits.
In the realms of worship and lifestyle
modern world has discarded many things
worthwhile
scoffing at them as superstitions.
Neo-astrology advocates the illusion
that none should live in the cabin
where ash-cats sleep;
that in rooms where
images of ash-cats hang
paranormals prevail _
so there goes a tale
Can it be so?
Oh oh _
Lo and Behold
What the Medal Vaasthu holds
as Astrology of the neo-world
is but business and trade.

சாம்பல் பூனைகள் உறங்கும் அறை

இயற்கை ஆரம்பத்தில் இருந்தே
பல விடயங்களை சொல்லி இருக்கிறது
உயிரினங்கள் மாற்றங்கள்
பல விதமான அர்த்தங்களை சொல்லுகின்றன
கடல் பொங்குவது ,
நிலம் நடுங்குவது ,
சூறாவளி , புயல்
பழக்கங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டோம்
வழிபாட்டு முறை
வாழ்க்கை முறை இவற்றில் பலதை
நவீன உலகம் எல்லாம் மூட நம்பிக்கை என
பலவற்றை அழித்துவிட்டது
நவீன ஜோதிடம் மாயையை சொல்கிறது
சாம்பல் பூனைகள் உறங்கும் அறையில்
யாரும் வசிக்க கூடாது
சாம்பல் பூனை படம் தொங்கும் அறையில்
அமானுஸ்யம் துயிலும் என
இந்த கதைகளை நம்புகின்றனர;
சாம்பல் பூனை உறங்கவிட்டால்
அந்த அறை அமானுஸ்யம் நிறைந்துவிடுமா ?
நவீன ஜோதிடம் என
மெடல் வாஸ்து கலாச்சாரம்
வியாபாரத்தை சொல்கிறது.

எஸ்.பி.பாலமுருகன்

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024