she has built a small hut
No doors are there
for her solitary abode
But to protect her with fervour
she has a sturdy dog with her.
During daytime the servant maid comes to chitchat.
When eight feet snake slips into her hut
For catching it and leaving it in the forest
menfolk of the tiny hamlet do visit.
Also, hen cock kittens are
her darling kids.
Christening them she draws them all close
and strokes them endearingly.
Above all, that which soothe her the most
are poems written in the well of night
with her very soul dissolving.
In those noiseless nights
in the house sank in the dark
the magic of those songs
of the mountain region where she was born
crawling at the corners of her eyelids
and descending on the white sheet
as lines intense
I can only claim that words fail to describe this
charm sublime
At dawns, writing poems notwithstanding,
feeling not at all worn-out
she begins a dialogue with Kaali the Great
dwelling in her habitat.
That she and her poems are but one
proclaims this poem in conclusion.
மிகப் பெரிய நிலப்பரப்பின் ஒரு மூலையில் சிறு குடில் அமைத்திருக்கிறாள்
தனித்திருக்கும் அவள் கிராமத்து வீட்டிற்கு கதவுகளில்லை
ஆயினும் கதவு போன்று அவளைப் பாதுகாக்க
ஒரு திடமான நாயொன்று அவளிடம் இருக்கிறது
பகலில் பேச்சுத்துணைக்கு வீட்டு வேலை செய்பவள் வந்து போகிறாள்
எட்டடி பாம்பு வீட்டிற்குள் நுழைந்துவிடுகையில்
அதனைப் பிடித்து காட்டிற்குள் விட அந்தச் சிறு ஊரின் ஆண்கள் வந்துபோகிறார்கள்
அது தவிர கோழி சேவல் பூனைகள்
அவளின் செல்லக் குழந்தைகள்
அவற்றிற்கு பெயர் சூட்டி அழைத்து
கொஞ்சி மகிழ்கிறாள்
மேலும் யாவற்றையும்விட
மிகப் பெரும் ஆறுதல் அவள் உயிர் உருக நடு இரவில் எழுதும் கவிதைகள்தான்
சத்தம் எழாத இரவுகளில் இரவினுள்
மூழ்கிய வீட்டினுள் அவள் இமைகளின் ஓரங்களில்
அவள் பிறந்த மலைப்பிரதேசத்தின் பாடல்கள்
ஊர்ந்து காகிதங்களிடையே
வரிகளாய் இறங்கும் மாயத்தை
விவரிக்க சொற்களில்லை என்றுதான் சொல்ல முடியும்
விடியும் பொழுதுகளில் கவிதைகள் எழுதிய களைப்பின்றி
அவளின் நிலத்திலிருக்கும் காளியோடு உரையாடத் தொடங்குகிறாள்
அவளும் அவள் கவிதைகளும்
வேறு வேறானதில்லை என்று முடிகிறது
இந்தக் கவிதை.
அய்யப்ப மாதவன்
No comments:
Post a Comment