INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Friday, December 11, 2020

ILAMPIRAI'S POEM

 A POEM BY

ILAMPIRAI


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


Keeping rice for the crows in a place not wet
Covering the dog that lies shivering on the floor, with a sack
Going to the cardboard-thatched house of the differently-abled person
living with his aged parents
I called them to come to my house that leaks not.
Saying wholeheartedly
‘Suffice to have you thus care for us’
they gave a cup of tea
Gulping the love in it
in the rainwater that flows all over the land
in the sand lined as the nerves of earth
splashing the water with my feet
I walked a little distance in the rain
in gay abandon.
In this all too dense darkness
where one can’t see the rain-clouds
coming as a cluster of buffaloes
the frogs’ song is sounding as
solitary music.
Today an explicit storm
is going to cross the shore it seems.
In this deadly quietude
_ calm before storm
alas, why the scream of the cow
sounding too loud
has not reached its master still?
Could it be that he too is standing somewhere
all drenched?
Is it because of the fact that
whenever the rain pours
in all splendour
upon the earth
there would invariably be
scenes of miseries
Rain the Merciful
closes its eyes and darkens...

Ilampirai

நனையாத இடத்தில்
காகங்களுக்கு
அரிசி வைத்து
குளிரில் நடுங்கிப் படுத்திருந்த
நாய்க்கு கோணிப்பை போர்த்திவிட்டு
அட்டையால் வேய்ந்த வீட்டில்
முதிய பெற்றோருடன் வசிக்கும்
மாற்றுத் திறனாளி
வீட்டிற்குப்போய்
ஒழுகாத எமது வீட்டிற்கு
வந்துவிடும்படி அழைத்தேன்.
அழைத்ததே போதும் என்று
தேநீர் தந்த அவர்களின்
அன்பைப் பருகி
நிலமெங்கும் வழிந்தோடும்
மழை நீரில்
பூமியின் நரம்புகளாக
கோடிட்டிருந்த மண்ணில்
நீரைத் தெத்தி தெத்தி
தூறலில் சற்று
நடந்து மகிழ்ந்தேன்.
வானில் அழகிய
எருமைக்கூட்டங்களாக
வந்து கொண்டிருந்த
கார்மேகங்களையும்
காண முடியாத இப்பேரிருளில்
தனி இசையாக
ஒலித்துக் கொண்டிருக்கிறது
தவளைகளின் பாடல்.
இன்று
வெளிப்படையான
புயல் ஒன்றும்
கரையை கடக்க
இருக்கிறதாம்.
காற்றிற்கு முன்பான
கனக்க வைக்கும்
இப்பேரமைதியில்
கத்திக்கொண்டிருக்கிற
ஒரு பசுவின் அலறல்
அதன் எஜமானனுக்கு
ஏன் இன்னும் கேட்கவில்லை
நனைந்து நிற்பானோ
எங்கேனும் அவனும்.
மண்ணில் நிறைவாக
பொழிகின்றபோதெல்லாம்
இன்னல் காட்சிகளும்
எதிர்படும் என்பதால்தான்
கண்களை மூடி
கருத்துக்கொள்கிறதோ
இக்கருணை வான்.!

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024