TWO POEMS BY
KARUNAKARAN SIVARASA
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
(1)
In mid-noon
when the Sun is shining as a marble-rock
Beneath the tree where I was reposing in the shade
All too suddenly a leaf came off and fallen amidst us.
Sparkling as a word between ours
the lone leaf remained with us.
Has it become one among us
Or an alien in our midst
with some evil purpose.
A child intercepting our focus
Or a passerby indifferent to us
The outline or an instant of
Farewell
Well, could it be
some message from the tree?
The turbulence of not knowing what
proved more scorching than the
Midday.
‘Nay, suffice to have stood there
in the vast grand space
playing in the wind to my heart’s content
cooling in the snowfall
getting drenched in the rain
savouring the taste of sun ….
Suffice thought I
and came in search of shade
to rest for a while’
Said the leaf
floating in hues and shades
In that the figure of tree rose and swayed.
.
Karunakaran Sivarasa
வெயில் ஒரு பளிங்குப் பாறையாக
ஒளிர்ந்து கொண்டிருக்கும் நடு மதியத்தில்
நிழலுக்கொதுங்கி
நாமிருந்த மரத்தின் கீழே
சட்டென ஒரு இலை உதிர்ந்து விழுந்தது
நமக்கிடையே.
நம்முடைய சொற்களின் நடுவே
இன்னொரு சொல்லாகப்
பளபளத்துக் கொண்டிருந்தது
அவ்விலை.
நம்மோடு
இன்னொருவராகச் சேர்ந்திருக்கிறதா அது?
நமக்கிடையில்
எதற்காகவோ புகுந்து கொண்டு
விலகி நிற்கும் அந்நியரா?
நம்முடைய கவனத்தில்
இடையீடு செய்யும் குழந்தையா?
அல்லது, தான் யாரோ நாம் யாரோ என்று
விட்டேத்தியாகச் செல்லும்
வழிப்போக்கனா?
விடை பெறுதலொன்றின்
தருணமா வடிவமா?
அன்றிலது மரத்தின் சேதியா?
எதுவென்றியாத தடுமாற்றம்
நமக்குள் கொதித்தது
அந்த மதியப் பொழுதையும் விட
விரிவெளியில் நின்று
காற்றிலாடிக் களித்து
பனியில் குளிர்ந்து
மழையில் நனைந்து
வெயிலின் சுவையறிந்தது போதுமென
நிழல் தேடி வந்தேன்
சற்று இழைப்பாற என்ற இலை
நிறங்களில் மிதந்து கொண்டிருந்தது.
அதில்
மரமொன்றின் ரூபம் எழுந்து நின்றசைந்தது.
(2)
Again and again and again
and again and again and again
and again and again and again
and again and again and again
and again and again and again
the same Sun
the same Moon
the same Sea
the same Sky
the same Directions
the same Stars
still
Again and again and again
and again and again and again
and again and again and again
and again and again and again
and again and again and again
how come each one of them
appear anew
and altogether an other one
She the conjurer
who turns any and everything
new everyday
so untiringly _
let me plant in her hands
a kiss with the flutter of parrots thousands.
How I wish to see her industrial unit
where everything is turned anew on a daily basis
and also
to analyze and grasp the techniques
of her exemplary expertise.
Karunakaran Sivarasa
•
திரும்பத் திரும்ப திரும்பத்
திரும்பத் திரும்ப திரும்பத்
திரும்பத் திரும்ப திரும்பத்
திரும்பத் திரும்ப திரும்பத்
திரும்பத் திரும்ப திரும்ப
அதே சூரியன்
அதே நிலவு
அதே கடல்
அதே வானம்
அதே திசைகள்
அதே விண்கண்கள்
ஆனாலும்
திரும்பத் திரும்ப திரும்பத்
திரும்பத் திரும்ப திரும்பத்
திரும்பத் திரும்ப திரும்பத்
திரும்பத் திரும்ப திரும்பத்
திரும்பத் திரும்ப திரும்ப
ஒவ்வொன்றும் புதிதாய்
வேறொன்றாய் தெரிவதென்ன?
எல்லாவற்றையும் தினமும்
சலியாது புதுப்பிக்கும்
ரசவித்தைக்காரியின் கைகளில்
ஆயிரம் பொற்கிளிகள் சிறகடிக்கவொரு
முத்தம்
எனினும்
அவளின் அந்தப் புதிதாக்கும்
ஆலையைக் காண வேண்டும் நான்
கூடவே
புதிதாக்கும் கைவினைத் திறனுட்பத்தையும்
ஆய்ந்தறிய வேண்டும்.
No comments:
Post a Comment