A POEM BY
VELANAIYUR RAJINTHAN
of the flourishing season of greenery.
The days when the leaf was with the branch
are indeed sacred
Dewdrop of Morn
Sunshine
The yellow spray of the
evening sky
amorous cooing of birds
animals cries of pleas
all and more
wholesome to the core!
Fighting against the sun’s heat
Warming up with the rain
Having sweet disputes with the wind
are moments of glorious love
Those hours of nurturing kinship with
the shoots, fellow-leaves, unripe and ripe fruits
are utterly enthralling.
That which happens now..
It could be the ultimate expression of
the love it has for the soil;
For proving its love for another leaf
having no other way
it might have ended its life.
For feeding a hungry animal
It might have so sacrificed.
It might be the effect of a
bird’s flutter.
Or, there might’ve been some
foul play
a small disappointment
or a terrible betrayal
Whatever be the case
in parting
there would lie buried without fail
wild love - so vast, uncurtailed.
பெருங்காட்டு நேசம்
___________________
பசுமைக் காலத்து
மரக்கிளையை விட்டுப்
பிரிந்திருக்கிறது ஓர் இலை!
இலை கிளையோடிருந்த
நாட்கள் பவித்திரமானவை!
காலை பனித்துளியும்
பகலவன் கதிரொளியும்
மாலை வான் மகளின்
மஞ்சள் தெளிப்பும்
பறவைகள் கொஞ்சலும்
பிராணிகள் கெஞ்சலும்
பரிபூரணம் நிறைந்தவை!
வெயிலோடு மோதலும்
மழையோடு கூதலும்
காற்றோடு ஊடலும்
பேரன்பின் தருணங்கள்!
தளிரோடும் சக இலையோடும்
பூவோடும் காய் கனியோடும்
உறவு வளர்த்த நாழிகை
பேரின்பம் மிகுந்தவை!
இப்போதான இந்த நிகழ்தல் என்பது...
மண் மீதான பிரியத்தின்
உயர்ந்த பட்ச
வெளிப்பாடாயிருக்கலாம்!
பிறிதோர் இலைமீதான
தன் காதலை நிரூபிக்க
வேறு வழியின்றித்
தன்னையே மாய்த்திருக்கலாம்!
பிராணி ஒன்றின் பசி தீர்க்கத்
தியாகம் புரிந்திருக்கலாம்!
பறவை ஒன்றின் சிறகசைப்பின்
பாதிப்பாயிருக்கலாம்!
அல்லது சூழ்ச்சியோ?
சிறு ஏமாற்றமோ? பெருந்துரோகமோ?
நிகழ்த்தப்பட்டிருக்கலாம்!
எது எப்படியோ!
ஒரு பிரிதலுக்குள்
பெருங்காட்டு நேசம்
நிச்சயம் புதையுண்டிருக்கும்!
- வேலணையூர் ரஜிந்தன்.
No comments:
Post a Comment