TWO POEMS BY
MA.KALIDAS
No sound from inside.
The stallion bursting out of the bridle run amok
and tumble down on the sand-mound.
Again a knock at the door.
The latch that unfastened itself
staring at the space outside flinched and recoiled.
Everywhere outside fingers and ears.
The hope that there is just a lone bolt inside _
a duplicate key quietly opens.
யாரோ கதவைத் தட்டுகிறார்கள்
உள்ளிருந்து எந்த சத்தமும் இல்லை.
லகானைத் திறந்து கொண்டு தறிகெட்டோடும் மனக்குதிரை
தடுமாறி விழுகிறது மணல்திட்டில்.
மீண்டும் கதவு தட்டப்படும் ஓசை
தன்னைத் தானே
திறந்து கொண்ட தாழ்ப்பாள்,
வெளியை வெறித்துப் பார்த்துவிட்டு உள்ளிழுத்துக் கொண்டது மறுபடி.
வெளி நிறைய விரல்களும் காதுகளும்.
உள்ளே
ஒரேயொரு தாழ்ப்பாள் மட்டுமென்ற
நம்பிக்கையை, அரவமில்லாமல் திறக்கிறது ஒரு கள்ளச்சாவி.
- மா.காளிதாஸ்
(2)
Unmindful of the biting chill getting into the pond
and sucking honey in the lotus _
Your smile.
The flower-vendor who seeks and selects chosen expressions
twining them feels at a loss to fix its cost.
You could have given as alms
a fraction of your beauty
to the pubescent Time
that pursued you all through.
Having you hand round my shoulder
you asked a question
the apprehension of which
the temple-dove’s flutter vouchsafed.
In the spot where you stood
someone is standing.
The fatigue born of circumambulation overpowering
the place where you sat to rest
has some nuggets strewn all over
At the spot where a speck of your kumkum
had fallen
Someone is leaving the footwear worn.
The portal of the sanctum sanctorum is being
fastened.
கடும் குளிரையும் பொருள்படுத்தாமல் குளத்தில் இறங்கி
தாமரை மலரில் தேன் உறிஞ்சுகிறது
உன் புன்னகை.
தேர்ந்தெடுத்த பார்வைகளைத் தேடியெடுத்து சரம் கோர்த்த பூக்காரி
விலை நிர்ணயிக்கத் திணறுகிறாள்.
வழிநெடுகத் துரத்தி வந்த
இளம் காலத்திடம்
உன் அழகின் சில்லறையில்
கொஞ்சம் பிச்சை போட்டிருக்கலாம் நீ.
என் தோளில் கைபோட்டபடி
நீ கேட்ட கேள்விக்கான
பதிலின் படபடப்பைப் பறந்து நிரூபித்தது கோயில் புறா.
நீ நின்ற இடத்தில்
யாரோ நின்று கொண்டிருக்கிறார்கள்.
சுற்றி வந்த களைப்புத் தீர
சம்மணமிட்டு நீ அமர்ந்த இடத்தில்
சிதறிக் கிடக்கிறது நொறுக்குத் தீனி.
உன் நெற்றிக் குங்குமப் பிசிறு
விழுந்த இடத்தில்
யாரோ செருப்பைக் கழற்றிப் போடுகிறார்கள்.
நடை சாத்தப்படுகிறது
No comments:
Post a Comment